Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு

20 நவ, 2022 - 22:03 IST
எழுத்தின் அளவு:
Famous-Dialogue-writer-Aaroor-Das-Passes-away

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(91) சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். வயதுமூப்பு காரணமாக அவரது உயிர் மாலை 6.40 மணியளவில் பிரிந்தது. "வாழ வைத்த தெய்வம்" என்ற படம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகமான இவர், சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் - தங்கை பாசத்தை கொண்டாடப்படும் படமான ‛பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார்.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம், கதை, திரைக்கதை அமைத்துள்ள, ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார். 'பெண் என்றால் பெண்' என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இயக்குநர் ஏசி திருலோகசந்தருக்கும், ஆரூர்தாஸ்க்கும் உள்ள நட்பு, நகமும் சதையும் போன்றது. இவர்களது கூட்டணியில் பல வெற்றி படங்கள் உருவாகின.

சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.

சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் லலித் குமார்விஜயின் வாரிசு திரைப்படத்தை ... இன்றும் பேசும் ‛பாசமலர்' - எம்ஜிஆர், சிவாஜி படங்களின் வசனங்களுக்கு உயிர்தந்த ஆரூர்தாஸின் திரைப்பயணம் இன்றும் பேசும் ‛பாசமலர்' - எம்ஜிஆர், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
21 நவ, 2022 - 11:00 Report Abuse
Venkatasubramanian krishnamurthy ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் ஷாந்தி.
Rate this:
21 நவ, 2022 - 09:22 Report Abuse
PREM KUMAR K R பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு பெரிதும் அதிர்ச்சியை தருகிறது. அந்த காலத்தில் எந்த நடிகர்களும் முன்னனி நட்சத்திரமாக முன்னேறவும் மக்களிடையே புகழ் பெறவும் காரணமாக இருந்ததில் அழுத்தமான-ஆழம் நிறைந்த வசனம் மிக முக்கிய பங்கு வகித்தது. அத்தகைய வசனங்களை எழுதி மக்கள் மனதில் ஒரு தனியிடத்தை பெற்றவர் ஆரூர்தாஸ் என்பது சத்தியமான உண்மை.
Rate this:
M.S.Jayagopal - Salem,இந்தியா
21 நவ, 2022 - 08:43 Report Abuse
M.S.Jayagopal ஆழ்ந்த இரங்கங்கள்.
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
21 நவ, 2022 - 08:30 Report Abuse
chennai sivakumar இன்றைய இளைய தலைமுறைக்கு தமிழே ஒழுங்காக தெரியவில்லை. பின்னர் திரு. ஆரூர் தாஸ் அவர்கள் எழுதிய ஆழமான வசனங்கள் எப்படி புரியும்? வசனங்கள் மூலம் குடும்ப கதைகளை நெஞ்சில் பதியும்படியாக எழுதி ரசிகர்களை வசியம் செய்தவர் திரு. ஆரூர் தாஸ் அவர்கள். அன்னாரின் இழப்பு தமிழுக்கும் திரை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது படைப்புகளில் பாசமலர், விதி போன்ற எண்ணற்ற படங்களை சொல்லலாம். குறிப்பாக பக்த பிரகலாதா என்ற புராண படத்திற்கு அவர் எழுதிய வசனங்கள்பாராட்ட பட வேண்டிய ஒன்று. காரணம் அவர் கிறித்தவ மதத்தை சேர்ந்தவர். பக்த பிரலாதன் கதையை ஆழ்ந்து படித்து உள்வாங்கி பாமரனுக்கும் புரியும் வண்ணம் அர்ப்பணிப்புடன் எழுதி இருப்பார். அன்னாரது ஆத்ம சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
Rate this:
21 நவ, 2022 - 07:33 Report Abuse
Subramanian ஆழ்ந்த இரங்கல்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in