மலையாளத்தில் அறிமுகமாகும் மராட்டிய நடிகை | ‛அட்டக்கத்தி' தினேசுக்கு அடுத்த பரீட்சை | எனக்கு கவின் சிபாரிசு செய்தார் : உண்மையை போட்டு உடைத்த அபர்ணா தாஸ் | எனது திருமணம் ஒரு விசித்திர கதை: ஹன்சிகா | நான் குடிக்கவேமாட்டேன் : ஓட்டேரி சிவா கண்ணீர் பேட்டி | சைலண்டாக நடந்து முடிந்த திருமணம் : பாண்டியன் ஸ்டோர்ஸ் மகேஷுக்கு குவியும் வாழ்த்துகள் | தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு போட்டி | 'ஏகே 62' யார் தான் இயக்குனர் ? | கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோத்ரா திருமணம், பிரபலங்கள் வாழ்த்து | விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்' விரைவில் திரையில் மின்னப் போகிறது |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளாராம். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. போனி கபூர் தயாரிக்க, வரும் பொங்கலுக்கு படம் வெளியாகவுள்ளது.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் முன்னோட்ட நிகழ்வில் நடிகர் அஜித் குமார் கலந்துக் கொள்ள பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. அஜித் கலந்துகொண்டால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
தற்போது துணிவு திரைப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நடிகர் அஜித்குமார் கலந்துக்கொள்வதாக வெளியான தகவல் உண்மையில்லை என அவரது மேலாளர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது .