அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் வரும் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ள படம் 'சர்தார்'. இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன்பின் இந்தப் படத்தைப் பற்றி அதிகமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வர ஆரம்பித்தன. அதில் ஒருவர் 'சர்தார்' படத்தின் கதையும், அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'ஜவான்' படத்தின் கதையும் ஒன்றுதான், “அப்பா ரா ஏஜன்ட், மகன் போலீஸ்” என ஒரு பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவை பகிர்ந்து நக்கலாய் ஒரு கமெண்ட் அடித்துள்ளார் 'சர்தார்' படத்தின் எடிட்டர் ரூபன். “நமது பள்ளி நாட்களில் என்னைப் போன்று பலரும் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகிய இருவரும் 'காந்த்' என்பதால் அண்ணன், தம்பி என நினைத்திருப்போம். அதன் பிறகு நான் வளர்ந்துவிட்டேன். ஆனால், இன்னும் சிலர் அந்த குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறார்கள். இங்க 'ரா' ஏஜன்ட் வச்சிட்டு இஷ்டத்துக்கு ராவா அடிச்சி விடக் கூடாது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “படத்தோட கதை என்னன்னு நமக்கே இன்னும் தெரில, இவங்களுக்கு மட்டும் ஏழாவது அறிவு இருக்கும் போல…மோசமான ஸ்பை, ரா ஏஜென்ட்டா இருக்காங்க,” என கிண்டலடித்துள்ளார்.
அட்லீக்கு தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த கதைகளைத்தான் திரும்பவும் மாற்றி எடுப்பது பழக்கம். ஆனால், ஒரே சமயத்தில் தமிழில் எடுக்கப்பட்டுள்ள ஒரு கதையை அவர் ஏன் ஹிந்தியில் எடுக்கப் போகிறார்?.