Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'குட்' ஆக இல்லாத ராஷ்மிகாவின் 'குட் பை' படத்தின் வசூல்

09 அக், 2022 - 11:24 IST
எழுத்தின் அளவு:
Amitabh-Bachchan-and-Rashmika-Mandanna's-film-Goodbye-box-office-collection-day-1

தெலுங்குத் திரையுலகத்தின் தற்போதைய முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் விஜய்யுடன் நடித்து வரும் 'வாரிசு' படம் வெளிவந்த பின் தான் இங்கு அவருக்கான இடம் எப்படி அமையும் என்பதும் தெரியும். கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் அவருக்கு சிறந்த அறிமுகமாக அமையவில்லை என்பதே அதற்குக் காரணம்.


ஹிந்தியில் ராஷ்மிகா கதாநாயகியாக அறிமுகமான 'குட் பை' படம் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்தது. ஒரு குடும்பப் படமாக எமோஷனலாக இருக்கிறது என விமர்சகர்களும், ரசிகர்களும் குறிப்பிட்டாலும் படத்தின் வசூல் மிக மோசமாகவே அமைந்துள்ளதாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கோடிக்கும் குறைவாக 90 லட்சம் மட்டுமே இந்திய வசூலாகப் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

'புஷ்பா' படம் மூலம் பாலிவுட்டில் பிரபலமான ராஷ்மிகா, அமிதாப் பச்சன் ஆகியோர் இருந்தும் 'குட் பை' படத்தின் வசூல் இப்படி இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்கள். இத்னைக்கும் 'குட் பை' படத்தின் டிக்கெட் கட்டணம் 150 ரூபாய் என்று மட்டுமே நிர்ணயிக்கப்பட்டும் ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கம் அதிகம் வரவில்லையாம்.

செப்டம்பர் 30ல் ஹிருத்திக் ரோஷன், சைப் அலிகான் நடித்து வெளிவந்த 'விக்ரம் வேதா' படமும் 10 நாள் ஆகியும் 100 கோடிக்குத் திண்டாடுகிறது. இந்த வாரம் வெளியான முக்கிய படமான 'குட் பை' படத்தின் வசூலும் சரியாக இல்லை என்பது பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஹிஜாப் போராட்டம் : ஈரானிய பெண்களுக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவுஹிஜாப் போராட்டம் : ஈரானிய ... தீபிகா படுகோனேவின் உதவி தீபிகா படுகோனேவின் உதவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10 அக், 2022 - 05:32 Report Abuse
NicoleThomson தாவூத் இப்ராஹிமின் கோட்டையில் தென்னிந்திய மக்கள் ஓட்டை போட்டு விட்டனர்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in