Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஏன் ஹிந்து மதத்தின் மீது மட்டும் குறி? திரைத்துறையினருக்கு அமைச்சர் கேள்வி

06 அக், 2022 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Why-only-target-Hinduism?-Minister's-question-to-the-film-industry

பிரபாஸ் நடித்துள்ள படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கி உள்ள இந்த படம் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாசும், சீதை கதாபாத்திரத்தில் கிரித்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ந்தேதி வெளியாக உள்ள படத்தின் டீசர் கடந்த 2ம்தேதி வெளியானது.

இந்த டீசர் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. தொழில்நுட்ப குறைபாடுகளால் புனிதமான ராமாயண கதாபாத்திரங்கள் காமெடியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. நெட்டிசன்கள் டீசரை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியிருப்பதாவது: எங்களுடைய மத நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் டீசரில் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர்கள் மாற்றம் செய்துள்ளனர். திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற மதங்கள் என்று வரும்போது, படைப்பாளிகள் படைப்பு சுதந்திரத்தை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.

பாபா மகாகலின் சொமேட்டோ விளம்பரம், சன்னி லியோனின் ராதா பாடல், சப்யசாச்சியின் மங்களசூத்ரா விளம்பரம், காளி படத்தின் போஸ்டர், ஓ மை காட் திரைப்படம், ஆஷ்ரம் வெப் சீரிஸ் என ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? ஏன் நாங்கள் மட்டும் குறியாக உள்ளோம்? பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் இந்த முறை தவறானது. இந்த படைப்பு சுதந்திரத்தை மற்ற மதங்கள் மீதும் எடுத்துக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜை துரிதப்படுத்திய சிரஞ்சீவிபிரித்விராஜை துரிதப்படுத்திய ... சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Suresh - NAVI MUMBAI,இந்தியா
13 அக், 2022 - 09:39 Report Abuse
Suresh These films are financed by other community people and they thrust the anti-hindu, anti-religious sentiments. We Hindus and Indians should realise early and should not go to the movie. Without viewers they can't survive. Either they take rubbish AUNTY or ANTI films.
Rate this:
suva - Folsom ,யூ.எஸ்.ஏ
11 அக், 2022 - 00:45 Report Abuse
suva Oru loosu aarya brahmin yendru ularuthu
Rate this:
Sutha - Chennai,இந்தியா
07 அக், 2022 - 07:53 Report Abuse
Sutha மத நூல்களில் திரிபு ஏற்படுத்துபவர்கள், பிறர் மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடுமையான தண்டனை சட்டம் கொண்டு வர வேண்டும்.
Rate this:
Thirumal s S - Gulbarga,இந்தியா
07 அக், 2022 - 07:32 Report Abuse
Thirumal s S ஏன்னா இந்து மதம் ஆர்ய பிராமணர்களால் நிர்வாகம் செய்ய படுகிறது
Rate this:
Nellai Ravi - Nellai,இந்தியா
09 அக், 2022 - 16:26Report Abuse
Nellai Raviஅதனால் தான் பெட்ரோல் பாம் veesuvathillai...
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
07 அக், 2022 - 04:31 Report Abuse
NicoleThomson சரியாதான் கேட்ருக்கீங்க , ஆனால் அங்கே குற்றவாளிகளை கைது செய்தால் கூட பெட்ரோல் பாம் போடுவார்கள் அதிலும் நம்மில் ஒரு வாசகர் சொன்னாரே "சும்மா போடுவாங்க " இதுவே அவர்களின் மதம் சார்ந்த நூலை படம் எடுத்தால் அவ்ளோதான்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in