Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் போண்டா மணி சிகிச்சைக்கு அரசு உதவி : மா.சுப்பிரமணியன் உறுதி

22 செப், 2022 - 15:36 IST
எழுத்தின் அளவு:
Government-will-help-to-Bondamani-says-Minister-MA-Subramanian

இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி. சென்னையில் சினிமா வாய்ப்பு தேடியபோது கே.பாக்யராஜ் இயக்கிய பவுனு பவுனுதான் படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். “கேதீஸ்வரன் என்கிற பெயர் சினிமாவுக்கு சரியாக வராது. நான் கவுண்டமணி நீ போண்டா மணி” என்று பெயரை மாற்றினார் கவுண்டமணி. போண்டாவை விரும்பி சாப்பிடுவதால் இப்படி ஒரு பெயரை வைத்தார். பின்னர் வடிவேலு குழுவில் இணைந்த போண்டாமணி இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

போண்டாமணிக்கு மாதவி என்ற மனைவி இருக்கிறார். இவர் மாற்றுத்திறனாளி. சாய்குமாரி என்ற மகளும், சாய் ராம் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் முறையே 12 மற்றும் 10ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.



தற்போது போண்டாமணி இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு நெருக்கமான சில நடிகர்கள் அவருக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் பதிவு செய்து மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அவர் காத்திருக்க வேண்டும், அல்லது தனியார் மருத்துவமனையில் 15 லட்சம் வரை செலவு செய்து மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதுவரை அவர் டயாலிசிஸ் செய்து கொண்டிருக்க வேண்டும். இதுதான் இப்போது அவரது உடல் நிலை.

இந்நிலையில் போண்டமணி கூறுகையில், “ஒரு படத்திற்காக நிஜ சாக்கடையில் இறங்கி நடித்ததால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. சமீபத்தில் தான் சிறுநீரகங்கள் செயலிழந்த விஷயம் தெரிந்தது. எல்லோரையும் சிரிக்க வைச்சேன். இறுதியாக, என் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் ஏற்பட்டதை தாங்கிக்க முடியல. நான் வறுமையில் வாடி வருகிறேன். எல்லாரையும் நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த நான், மிகவும் வேதனையான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன். அனைத்து மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வரும் முதல் அமைச்சர் எனக்கும் உதவ வேண்டும்” என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார்.



இதனிடையே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து பேசினார். அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து தரப்படும் என கூறியிருக்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‛‛போண்டா மணிக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டயாலிசிஸ் செய்யும் சூழல் உருவாகி உள்ளது. சீறுநீரக மாற்று சிகிச்சை செய்யும் நிலையை எட்டி வருகிறது. அவரது உறவினர்கள் யாராவது சிறுநீரகம் தானம் செய்வார்களா என்று விசாரிக்க சொல்லி உள்ளோம். கிடைக்காத பட்சத்தில் அரசு விதிகளின் படி அவருக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான செலவு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்யப்படும். அவருக்கு வேண்டிய சிகிச்சை அரசு சார்பில் செய்யப்படும்'' என்றார் மா.சுப்ரமணியன்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
4வது தமிழ் படத்தை தயாரிக்கும் ஷர்மிளா4வது தமிழ் படத்தை தயாரிக்கும் ... பிரின்ஸ் இரண்டாவது பாடல் நாளை வெளியாகிறது பிரின்ஸ் இரண்டாவது பாடல் நாளை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
24 செப், 2022 - 15:09 Report Abuse
Natchimuthu Chithiraisamy படம் நடித்த நடிகருக்கு ஏன் இந்த நிலைமை. பணத்தை சரியாய் பிரிக்காமல் மற்றவர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
Rate this:
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
24 செப், 2022 - 05:03 Report Abuse
tamilvanan அரசு பணத்தை எடுத்து ஒரு காமடி நடிகருக்கு செலவு செய்வதா? அந்த சாக்கில் அமைச்சருக்கு இலவச விளம்பரமா? போண்டா மணிக்கு உதவி செய்ய அவருடைய காமடி குழு சகாக்களும் வடிவேலுவும் கையை விரித்தார்களா? அரசு பணத்தை இப்படி எல்லாம் வாரி வழங்கினால் பற்றாக்குறை வராமல் போகுமா?
Rate this:
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
23 செப், 2022 - 19:37 Report Abuse
தாமரை மலர்கிறது மா சுப்ரமணியன் யார்? சினிமா நடிகரா? அவரது சொந்த காசில் இருந்து செலவு செய்கிறாரா? தமிழக அமைச்சர் அரசின் வரிப்பணத்தை எடுத்து செலவு செய்கிறார். தலைப்பு செய்து அமைச்சர் மா சுப்ரமணியன் என்று போடுங்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in