Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விக்ரம்' - இப்படம் இன்றே கடைசி

22 செப், 2022 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Vikram-movie-today-is-last-day

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த ஜுன் மாதம் 3ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் 100 நாட்களைக் கடந்த பின்பும் கோவை கேஜி தியேட்டரில் ஓடி வந்தது. இன்று 113வது நாளுடன் இப்படத்தின் ஓட்டம் நிறைவுக்கு வருகிறது. தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, ஓடிடியில் வெளிவந்த பின்பும் ஒரு படம் 100 நாளைக் கடந்து 113 நாட்கள் ஓடியிருப்பது புதிய சாதனைதான். கோவை கேஜி தியேட்டரில் கடந்த வாரம் நடைபெற்ற 100வது நாள் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழ் சினிமா உலகில் இதுவரையில் வெளிவந்த படங்களில் அதிக லாபத்தை ஈட்டித் தந்த படம் என அப்போது பேசிய திரையுலகப் பிரமுகர்கள் தெரிவித்தார்கள். சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும் கமல்ஹாசன் திரையுலகப் பயணத்தில் 'விக்ரம்' படத்தின் வெற்றி மறக்க முடியாத ஒன்று. இப்படம் பெற்ற வசூலை அடுத்து எந்தப் படம் முறியடிக்கப் போகிறது என்பது பெரிய கேள்விக்குறிதான்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த எமி ஜாக்சன்மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்த ... 'துணிவு' முதல் பார்வை : மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை 'துணிவு' முதல் பார்வை : மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathish - Coimbatore ,இந்தியா
24 செப், 2022 - 03:50 Report Abuse
Sathish வசூல் கணக்கை மக்கள் பார்த்தார்களா என்ன? தமி சினிமா வரலாற்றில் என்பதைவிட உலக வரலாற்றிலேயே என்று கூட சொல்லலாம். மக்கள் கேள்விகேட்க போவதில்லை.
Rate this:
Radja - Singapore,சிங்கப்பூர்
23 செப், 2022 - 19:07 Report Abuse
Radja எல்லா உண்மையும் சிறிய தத்திக்கு தெரியும்.எல்லாம் கொள்ளக்கூட்ட குடும்ப சொத்து.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in