Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகைகளிடம் அத்துமீறல் எதிரொலி ; தனி ஆளாக புரமோட் செய்த நிவின்பாலி | மும்பை போலீஸ் தெலுங்கு ரீமேக் ; சுதீர்பாபு துணிச்சல் முயற்சி | ஜென்டில்மேன்-2 ஹீரோவாக சேதன் சீனு: தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு | நவ.,4ல் ‛லவ் டுடே' வெளியீடு | தீபாவளிக்கு தமிழில் வெளியாகும் ‛ஹர ஹர மகாதேவ்' | தனுஷின் வாத்தி படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் | சிரஞ்சீவியின் 'காட் பாதர்': நல்ல விமர்சனம் வந்தும் வசூல் குறைவு | நகுல்,ஸ்ரீ காந்த், நட்டி இணைந்து நடிக்கும் புதிய படம் | வைரலாகும் தனுஷின் கேப்டன் மில்லர் புல்லட் பைக் புகைப்படம்! | பொன்னியின் செல்வனை பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும்: திமுக எம்.பி திருச்சி சிவா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛துணிவு' : அஜித் பட தலைப்பு அறிவிப்பு

21 செப், 2022 - 18:44 IST
எழுத்தின் அளவு:
Ajith-61-movie-titled-as-Thunivu-:-First-look-out

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்த படம் தான் ‛ஏகே 61'. நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதையில் உருவாகி வரும் இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதுநாள் வரை படத்திற்கான தலைப்பு வைக்கப்படாமல் இருந்தது.

கடந்த சில நாட்களாக 'ஏகே 61' அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர். படத்திற்கு துணிவே துணை, துணிவு ஆகியவற்றில் ஒன்றை வைக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று(செப்., 21) மாலை படத்தின் தலைப்பை அறிவித்தனர். அதன்படி படத்திற்கு ‛துணிவு' என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். போஸ்டரில் அஜித் ஒரு சேரில் சாயந்த படி கையில் துப்பாக்கி உடன் உள்ளார். தலைப்பிற்கு கீழே கேப்ஷனாக No guts no glory என குறிப்பிட்டுள்ளனர். அதாவது ‛துணிவு இல்லை என்றால் மகிமை அல்லது புகழ் இல்லை' என்பது அதன் பொருள். முன்னதாக நேற்று மாலை முதலே படத்தின் தலைப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வந்தனர். துணிவு என தலைப்பு வந்ததும் ரசிகர்கள் அதை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா 2வில் மலைகா அரோராபுஷ்பா 2வில் மலைகா அரோரா மணிரத்னமாக மாறி பதில் அளித்த கவுதம் மேனன் மணிரத்னமாக மாறி பதில் அளித்த கவுதம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

22 செப், 2022 - 09:29 Report Abuse
எவர்கிங் வீரம், துணிவு.... அடுத்து தூரம், இடைவெளி தலைப்புகளுக்கு பஞ்சம்
Rate this:
Elango - Sivagangai,இந்தியா
22 செப், 2022 - 05:29 Report Abuse
Elango நடிப்புக்கு முக்கியத்துவம் மற்றும் நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றி பெறுவது தான் சிறந்த நடிகர்...ஏதோ ஒரு கதை,ஏதோ நடித்தோம் என்று நடித்து கோடிகளில் புரளும் எண்ணம் கொண்ட நடிகன் நடிகன் அல்ல....வெத்து வேட்டு நடிகர்கள் அஜீத்,விஜய்,ரஜினி. சிறந்த நடிகர்கள் கமல்,தனுஷ்,சூர்யா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in