ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' | சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு கூட்டணியின் புதிய படம் தள்ளிப்போகிறது? | சசிகுமார் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் ரிலீஸ் செய்கிறது | இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் |

உலக அளவில் சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் நடக்கும் இந்த விழாவில் உலக நாடுகளில் இருந்து பல படங்கள் அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் 2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் குஜராத்தி படமான ‛செல்லோ ஷோ' தேர்வாகி உள்ளது.
பேன் நலின் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் 9வயது சிறுவனை மையமாக வைத்து உருவாகி உள்ளது. யதார்த்தமாக படமாக்கப்பட்டுள்ள இந்த படம் ஏற்கனவே சில சர்வதேச பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படுகிறது.
ஆஸ்கருக்கு அனுப்ப இந்தியாவின் பல மொழிகளில் இருந்து படங்கள் தேர்வாகின. குறிப்பாக ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர், விவேக் அக்னி ஹோத்ரியின் காஷ்மீர் பைல்ஸ் படங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இறுதியில் ‛செல்லோ ஷோ' தேர்வானது.