Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛வாத்தி' ரிலீஸ் தேதி வந்த மறுநாளே ‛நானே வருவேன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

20 செப், 2022 - 13:18 IST
எழுத்தின் அளவு:
NaaneVaruvean-release-date-announced

அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ‛‛நானே வருவேன்''. எல்லி அவ்ரம், இந்துஜா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார். சமீபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இரண்டு வேடங்களில் தனுஷ் நடித்திருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் செல்வராகவன் - தனுஷ் - யுவன் கூட்டணி இணைந்திருப்பதும் படம் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது.

படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இம்மாதம் இறுதியில் படம் வெளியாகும் என கூறியிருந்தனர். ஆனால் தேதியை வெளியிடாமல் இருந்தனர். அதேசமயம் தனுஷ் நடித்துள்ள மற்றொரு படமான வாத்தி படத்தின் ரிலீஸ் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த படம் டிச., 2ல் வெளியாக உள்ளது. இந்நிலையில் வாத்தி ரிலீஸ் வந்த மறுநாளே, அதாவது இன்று(செப்., 20) நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படம் வருகிறது செப்., 29ல் தமிழ், தெலுங்கில் தியேட்டர்களில் வெளியாகிறது.

நானே வருவேன் ரிலீஸாகும் படத்திற்கு மறுநாள் மணிரத்னம் இயக்கி உள்ள பிரமாண்ட சரித்தி படமான பொன்னியின் செல்வன் 5 மொழிகளில் இந்திய முழுக்க வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் சிறு ஓய்வெடுக்கும் சமந்தா?மீண்டும் சிறு ஓய்வெடுக்கும் சமந்தா? 'கப்ஜா' டீசருக்கு பெரும் வரவேற்பு : கன்னட சினிமாவில் மற்றுமொரு 'கேஜிஎப்' ? 'கப்ஜா' டீசருக்கு பெரும் வரவேற்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Jagadeesan - Tirupur,இந்தியா
21 செப், 2022 - 08:53 Report Abuse
 Jagadeesan தமிழர்கள் வரலாற்றைசொல்லும் படத்திற்கு எதிராக வரும் தனுஷ் படத்தை யாரும் பார்க்க கூடாது
Rate this:
c.chandrashekar - VELLORE,இந்தியா
20 செப், 2022 - 13:50 Report Abuse
c.chandrashekar இந்த படம் தமிழர்களின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வருவதால் நான் இந்த படத்தை பார்க்க போவதில்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in