Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எனது அறக்கட்டளைக்கு நன்கொடை அனுப்பாதீர்கள்: ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

14 செப், 2022 - 12:31 IST
எழுத்தின் அளவு:
Don't-donate-to-my-charity-says-Raghava-Lawrence

ராகவா லாரன்ஸ் தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இதனால் தனது உடலில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். அத்துடன் தான் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன்.

இப்போது, நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன். இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
போதைக்கு எதிராக உடற்பயிற்சி : இயக்குனர் அமீரின் விழிப்புணர்ச்சி திட்டம்போதைக்கு எதிராக உடற்பயிற்சி : ... தெலுங்கில் 'நேனே வஸ்துன்னா'வாக வெளியாகும் 'நானே வருவேன்' தெலுங்கில் 'நேனே வஸ்துன்னா'வாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Ram -  ( Posted via: Dinamalar Android App )
15 செப், 2022 - 10:24 Report Abuse
Ram நல்ல முயற்சி.... வாழ்க பல்லாண்டு
Rate this:
14 செப், 2022 - 15:36 Report Abuse
சதிஷ் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றார். வாழ்த்துக்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in