Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வெந்து தணிந்தது காடு - மூவரின் மூன்றாவது கூட்டணி முத்திரை பதிக்குமா ?

13 செப், 2022 - 10:12 IST
எழுத்தின் அளவு:
Vendhu-Thanindhathu-Kaadu-:-three-alliance-magic-will-happend-again?

இயக்குனர் கவுதம் மேனன், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், சிம்பு கூட்டணி 2010ம் ஆண்டில் நிகழ்த்திய 'மேஜிக்' தான் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. 2000க்குப் பிறகு வெளிவந்த காதல் படங்களில் அப்படத்திற்கு ரசிகர்கள் மனதில் தனி இடமுண்டு. வெளிவந்து 12 ஆண்டுகள் ஆன பிறகும் கார்த்திக், ஜெஸ்ஸி கதாபாத்திரங்கள் ரசிக்கப்பட்டு வருகிறது. இன்றைய இளம் இயக்குனர்கள் எடுக்கும் காதல் படங்களுக்கு அப்படம் ஒரு முன்னுதாரணமாய் இருக்கிறது.

அப்படி ஒரு மேஜிக் செய்த கூட்டணியிடமிருந்து ஆறு வருடங்கள் கழித்து வெளிவந்த படம் 'அச்சம் என்பது மடமையடா'. இப்படத்தில் காதலுடன் ஆக்ஷனையும் கலந்து கொடுத்ததாலும், படம் கொஞ்சம் கால தாமதமாக வெளிவந்ததாலும் ரசிகர்களிடத்தில் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. மீண்டும் ஒரு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கவுதம், ஏஆர்ஆர், சிம்பு கூட்டணியில் இந்த வாரம் செப்டம்பர் 15ம் தேதி வெளிவர உள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'.

இப்படத்தின் டிரைலரைப் பார்த்தும், பாடல்களைக் கேட்டும் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காதலை விடவும் ஆக்ஷன்தான் படத்தில் பிரதானமாக இருக்கும் எனத் தெரிகிறது. வித்தியாசமான தோற்றத்தில் சிம்பு நடித்திருப்பதால் அவருடைய ரசிகர்களைக் கவரலாம். படத்தின் நீளம் 3 மணி நேரம் என்று ஒரு தகவல். சமீப காலத்தில் இப்படி நீளமாக வரும் படங்கள் பொறுமையை சோதிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.

கவுதம், ஏஆர்ஆர், சிம்பு என்ற மூவர் கூட்டணியின் மூன்றாவது படமான 'வெந்து தணிந்தது காடு' எப்படிப்பட்ட படமாக அமையப் போகிறது என்பது திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஸ்ரீவள்ளியாகப் போகிறேன் : ராஷ்மிகாமீண்டும் ஸ்ரீவள்ளியாகப் போகிறேன் : ... மாறுபட்ட தோற்றங்களில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ராம்சரண் மகேஷ்பாபு மாறுபட்ட தோற்றங்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
13 செப், 2022 - 11:06 Report Abuse
KayD அந்த கால ராஜநாகம் then அலைகள் ஓய்வதில்லை la கொஞ்சம் ek tuje kheliyae la komjam mix pannadhu தான் விண்ணை தாண்டி வருவாயா.. ARR மியூசிக் and STR dance மட்டும் தான் படத்தை thooki நிறுத்தி வைத்து இருக்கு. அச்சம் என்பது மடமை ஒரு மடையன் படம்.. வர போற வெந்த படத்தில் நம்மை எல்லை வெள்ளாவி ல வச்சி avikkaama irundhaa சரி. Recent aa cobra FDFS la வாங்கின kothu இன்னும் சுறு சுறு nu இருக்கு.. Rehdu நாள் wait pannitu போங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in