Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'பிரம்மாஸ்திரா' : நமது இந்தியக் கலாச்சாரக் கதை - ராஜமவுலி

03 செப், 2022 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Brahmastra-story-is-our-culture-says-SS-Rajamouli

பாலிவுட்டில் அடுத்து எதிர்பார்க்கப்படும் படமாக 'பிரம்மாஸ்திரா' படம் இருக்கிறது. அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா, மவுனி ராய் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தைத் தென்னிந்தியாவில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' புகழ் இயக்குனர் ராஜமவுலி வெளியிடுகிறார். இப்படத்தின் தயாரிப்பில் கரண் ஜோஹர் இருப்பதாலும், வாரிசு ஜோடிகளான ரன்பீர், ஆலியா இருப்பதாலும் 'பாய்காட்' சர்ச்சையில் இந்தப் படமும் சிக்கியுள்ளது.

இதனிடையே, இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில், ஜுனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் ராஜமவுலி பேசுகையில், “ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அயன் முகர்ஜி பற்றியும், இந்தப் படம் பற்றியும் என்னிடம் கரண் ஜோஹர் பேசினார். அவர் மீதுள்ள மரியாதையால் படத்தைப் பற்றிக் கேட்டேன். அயன் முகர்ஜி 'அஸ்திரங்கள்' பற்றிப் பேசியதும் என்னுடைய சிறிய வயது பேண்டஸி விஷயங்கள் ஞாபகம் வந்து போனது. அது பற்றி நிறைய உழைத்து எழுதியிருக்கிறார் அயன். இந்த மாதிரியான படங்களுக்கு ஆதரவு கொடுத்தாக வேண்டும்.

நமது கலாச்சாரத்தில் உள்ள சூப்பர் பவர், கதைகளைப் பற்றிய படம் இது. இந்திய கலாச்சாரத்தில் உள்ள அனைத்தையும் பற்றிய படம்தான் இந்த 'பிரம்மாஸ்திரா'. அதனால்தான் இந்தப் படத்தை தென்னிந்தியாவில் வெளியிடுகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'பாய்காட்' சர்ச்சையை சமாளிக்குமா 'பிரம்மாஸ்திரா' ?'பாய்காட்' சர்ச்சையை சமாளிக்குமா ... ராஷ்மிகா மந்தனாவின் குட் பை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது ராஷ்மிகா மந்தனாவின் குட் பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

chakra - plano,யூ.எஸ்.ஏ
04 செப், 2022 - 03:40 Report Abuse
chakra இப்படி எதாவது ஒரு கதை அளந்தால்தான் படம் ஓடும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in