'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா | அமெரிக்க வசூல் - இரண்டாம் இடத்தைப் பிடித்த 'பதான்' | ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார் | பிப்ரவரி 18ல் சிம்புவின் ‛பத்து தல' படத்தின் இசை விழா | சூர்யா 42 : அதிரடி சண்டைக் காட்சி படமாக்கம் | 22வது திருமணநாளில் ராதிகாவுக்காக சரத்குமார் வெளியிட்ட வீடியோ | செவிலியர் குறித்து பேசியதற்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த பாலகிருஷ்ணா | மகேஷ்பாபு பட வாய்ப்பு கை நழுவியதால் வாட்ச் கம்பெனி வேலைக்கு போன சமீரா ரெட்டி | அப்டேட் கேட்டு அடம் பிடிக்காதீர்கள் : ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் வேண்டுகோள் | மீண்டும் சர்ச்சையில் சிக்கிய 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு |
ஹிந்தியில் ஆமீர்கான், கரீனா கபூர், நாகசைதன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் லால் சிங் சத்தா. இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. ராணுவ வீரர்களின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நடித்திருக்கிறார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஆமீர்கானை போலவே நாக சைதன்யாவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் லால் சிங் சத்தா படத்தில் நீங்கள் நடித்திருக்கும் வேடத்தில் முதலில் கமிட்டாகி இருந்த விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் என்ன? என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நாகசைதன்யா கூறுகையில், இந்த படத்தில் ஆமீர்கானின் நண்பராக முதலில் விஜய் சேதுபதி தான் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் லால் சிங் சத்தா படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டதால், பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதியால் இப்படத்திற்கு அவர்கள் கேட்ட தேதியில் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த படத்தில் இருந்து அவர் விலகிக்கொண்டார். அப்படி அவர் விலகியதன் காரணமாகவே அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இப்படத்திலும் நான் ஒரு தெலுங்கு பேசும் ஆந்திரா பையனாகவே நடித்துள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார் நாகசைதன்யா.