கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |
தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் பிரம்மாண்ட இயக்குனர் என அழைக்கப்படும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதியன்று வெளியாக உள்ளது.
தனது அறிமுகப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே அதிதி ஷங்கர் இரண்டாவது படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கம் 'மாவீரன்' படம்தான் அதிதியின் இரண்டாவது படம். இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு ஆடிப் பெருக்கு அன்று சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார் ஷங்கர்.
அன்றைய தினமே மாலை மதுரையில் நடைபெற்ற 'விருமன்' இசை வெளியீட்டு நிகழ்விலும் ஷங்கர் தனது குடும்பத்தாருடன் கலந்து கொண்டார். தனது பட விழாக்களுக்கு அப்பா வந்து வாழ்த்தியது குறித்து அதிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கி வரும் தெலுங்குப் படத்திற்கான படப்பிடிப்பு ஸ்டிரைக் காரணமாக நிறுத்தப்பட்டுளளதால் மகளின் பட விழாக்களில் கலந்து கொள்ள அவருக்கு நேரம் கிடைத்துள்ளது.