'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
ஹனு ராகவபுடி இயக்கத்தில் விஷால் சந்திரசேகர் இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நாளை(ஆக., 5) வெளியாகிறது.
மலையாள நடிகரான துல்கர் சல்மானின் மிகப் பெரிய வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இப்படத்திற்கு அரபு நாடுகள் தடை விதித்துள்ளன. மதம் சார்ந்த சென்சிட்டிவ்வான விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது என பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவை படத்திற்கு தடை விதித்துள்ளன.
துல்கர் சல்மான் நடித்து வெளிவந்த 'குரூப்' படத்திற்கும் இதே போல்தான் அந்த நாடுகள் தட விதித்தன. இருப்பினும் படக்குழுவினர் மீண்டும் சென்சாருக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அரபு நாடுகளில் மலையாள நடிகர்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அங்கு லட்சக்கணக்கான மலையாளிகள் வசித்து வருகிறார்கள். எனவே, அங்கு படம் வெளியாகாமல் போனால் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.