Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாதுகாப்பிற்காக துப்பாக்கி லைசென்ஸ் பெற்ற சல்மான் கான்

01 ஆக, 2022 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Salmankhan-got-gun-license-for-self-protection

பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான் கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான் சிக்கியதிலிருந்தே அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

கடந்த மே மாதம் பிரபல பஞ்சாய் பாடகரான சித்து மூசேவாலாவை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக் கொன்றது. அப்போது சல்மான் கானுக்கு அந்தக் கும்பலிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதனடிப்படையில் தனது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மும்பை போலீஸிடம் லைசென்ஸ் கேட்டு சல்மான் விண்ணப்பித்திருந்தார்.

சல்மானின் கிரிமினல் ரெக்கார்டு, அவரது பின்னணி ஆகியவற்றை விசாரித்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் உடன் சல்மான் இது குறித்து நேரிலும் பேசியுள்ளார்.

தான் வழக்கமாகப் பயன்படுத்தும் லேண்ட் குரூய்சர் காரையும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத புல்லட் ப்ரூப் காராக சல்மான் மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனக்குச் சொந்தமான வீட்டை நடிகருக்கு விற்ற ஜான்வி கபூர்தனக்குச் சொந்தமான வீட்டை நடிகருக்கு ... ரன்வீர் சிங்கை நிர்வாணமாக  பார்க்கவே ஆசை : பாலிவுட்  நடிகை ஏற்படுத்திய பரபரப்பு ரன்வீர் சிங்கை நிர்வாணமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
02 ஆக, 2022 - 00:02 Report Abuse
BalaG என்ன வாழ்க்கை இது? இவ்வளவு கோடிகளை சாம்பாதித்து இப்படி பயந்து வாழ வேண்டும் என்று என்ன அவசியம்? போலீசில் புகார் கொடுத்து பாதுகாப்பு கேட்கலாமே? இனிமே எப்படி இவர் தைரியமாக வெளியில் வர முடியும்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in