Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

விவாகரத்துக்கு விண்ணப்பித்த மகேஷ்பாபு பட இயக்குனர்

18 ஜூலை, 2022 - 16:50 IST
எழுத்தின் அளவு:
Srinu-vaitla-files-for-divorce

இந்த இரண்டு வருடங்களில் சினிமா பிரபலங்கள் பல பேர் தங்களது விவாகரத்து அறிவிப்பையும், மறுதிருமண அறிவிப்பையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சீனு வைட்லா தனது மனைவி ரூபாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகேஷ்பாபு நடித்த தூக்குடு, ஆகடு மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த பாட்ஷா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியவர் தான் சீனு வைட்லா. இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக புதிய படம் ஏதும் இயக்காமல் இருந்து வருகிறார்.

இதன் பின்னணியில் அவருக்கும் அவரது மனைவிக்குமான குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சீனு வைட்லாவின் மனைவி ரூபா, அவர் இயக்கிய பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். அதுமட்டுமல்ல முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோருக்கும் பிரத்தியோக ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர். ரூபாவின் கேரியரில் அவர் மிகப்பெரிய அளவு வளர வேண்டும் என அதற்கு உறுதுணையாக நின்றவர் தான் சீனு வைட்லா. இருந்தாலும் தற்போது இவர்கள் இருவருக்குமான பிரிவு தவிர்க்க முடியாததாக மாறி, விவாகரத்து கோரி நீதிமன்றம் வரை சென்றுள்ளது துரதிர்ஷ்டமான ஒன்றுதான்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் படத்தை திரையிடாதது ஏன்? - திரைப்பட விழாவில் பெண் இயக்குனர் ஆர்ப்பாட்டம்என் படத்தை திரையிடாதது ஏன்? - ... இயக்குனர்கள், ஹீரோக்கள் சம்பள உயர்வால் சிக்கல்: ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தெலுங்கு சினிமா ஸ்டிரைக் இயக்குனர்கள், ஹீரோக்கள் சம்பள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in