சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா |
தமிழில் விஜய் நடித்த பிகில் படத்திற்கு பிறகு தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார் அட்லி. நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ள அட்லி, தற்போது தெலுங்கு நடிகர் ராணாவை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதுவரை வட இந்தியாவில் நடைபெற்று வந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஷாருக்கானுடன் இணைந்து ராணா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. பாகுபலி வில்லனான ராணா இந்தப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாகவும் டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.