ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் |
தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார் . ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் தனது இளைய மகன் லிங்காவுக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாத்தி படப்பிடிப்பின் இடைவெளியில் மகன்களுடன் கிரிக்கெட் விளையாடியுள்ள தனுஷ் குழுவாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் .அந்த பதிவில் , என் லிங்கா பேபிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் வாழ்க்கையின் ஒளியாக இருந்ததற்கு நன்றி 'என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்