ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுவது எளிதானதல்ல : குப்ரா சயித் | சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் |
ரேடியோ ஜாக்கியாக இருந்து, நகைச்சுவை நடிகராக மாறி, பின்னர் கதாநாயகனாகவும், இயக்குனராகவும் தன்னை உயர்த்திக் கொண்டவர் ஆர்ஜே பாலாஜி. அவர் இணைந்த இயக்கம், மற்றும் நடிப்பில் வெளிவந்த 'வீட்ல விசேஷம்' படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசுகையில் விஜய்யை சந்தித்து கதை சொன்ன சம்பவம் குறித்தும் பேசினார். “இன்று பிறந்தநாள் கொண்டாடும் விஜய் சாரை காலைல விஷ் பண்ணேன். அப்புறம் இந்த விஷயத்தை ஷேர் பண்ணலாமா சார்னு கேட்டேன், ப்ளீஸ்பா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லன்னு சொன்னாரு.
இந்த வருஷம் ஜனவரி 27ம் தேதி அன்னைக்கு விஜய் சாருக்கு கதை சொல்ற ஒரு வாய்ப்பு கிடைச்சது. லைப்ல பெரிய வாய்ப்பு அது. அவர் கூட இருந்த அந்த இரண்டு மணி நேரம் ரொம்ப ஸ்பெஷலானது. இரண்டு மாசம் கதை எழுதி, ஒரு 40 நிமிஷம் ஒரு லைன் மட்டும் சொன்னேன். இரண்டு மாசத்துல என்னால அது மட்டும்தான் பண்ண முடிஞ்சது. அதைக் கேட்ட அவருக்கு அது ரொம்ப பிடிச்சது.
காமெடியா, பேமிலியா ஒரு 'மூக்குத்தி அம்மன்' மாதிரி உங்க ஸ்டைல்ல எதிர்பார்த்தேன். ஆனா, ரொம்ப பெருசா இருக்கே, தயாராக எவ்வளவு டைம் எடுக்கும்னு கேட்டாரு. ஒரு வருஷம் ஆகும்னு நான் சொன்னேன். என்னப்பா இப்படி சொல்ற, ஒரு வருஷமான்னு கேட்டாரு. ஆமாம் சார், 'வீட்ல விசேஷம்'னு ஒரு ரீமேக் படம் எடுக்கறோம். அதை எடுக்கறதுக்கு எங்களுக்கு அஞ்சி மாசமாச்சி. சின்ன ஸ்கேல்ல படம் எடுக்கும் போதே இப்படின்னா, உங்களை மாதிரி பெரிய ஸ்டாரை வச்சி படம் எடுத்தால், படம் முடியும் போது உங்களுக்கு 'செமயா இருந்தது நல்லா இருந்ததுன்னு' தோணும்,எனக்கும், படம் பார்க்கிறவங்களுக்கு அப்படி இருக்கணும் சார்னு சொன்னேன்.
அப்புறம் அவர் எப்ப வேணாலும் வந்து சொல்லுன்னு சொன்னாரு. நான் உடனே, இல்ல சார் எனக்கு எந்த அவசரமில்ல, தளபதி 67 , இல்லன்னா 77, இல்லன்னா 87 பண்றேன், இங்கதான இருக்கப் போறோம்னு சொன்னேன்,” என்றார்.
அந்தக் கதை சொல்லும் போது 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் வரவில்லை. அவர் கிட்ட கதை சொல்லும் போது நான் ஒரு பான் - இந்தியா படமாதான் சொன்னேன்,” என்றார்.