Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா?

24 மே, 2022 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Yash's-next-film-'KGF3'-or-Kannada-film?

'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகிவிட்டார் கன்னட நடிகரான யஷ். நாடக நடிகர், டிவி நடிகர், சினிமா நடிகர் என அவரது பயணம் ஆச்சரியப்படும் அளவிற்கு வளர்ந்து உயர்ந்து இப்போது பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார்.

'கேஜிஎப்' படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இரண்டாம் பாகம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கடுத்து ஜுனியர் என்டிஆரின் 31வது படத்திற்கும் ஒப்பந்தமாகிவிட்டார். ஆனால், 'கேஜிஎப்' படத்திற்காக எட்டு ஆண்டுகள் வரை உழைத்த யஷ் தனது அடுத்த படம் பற்றிய எந்த அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை.

'கேஜிஎப் 2' படத்தின் 50வது நாளில் அவருடைய அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. கன்னடத்தில் 'முப்டி' என்ற படத்தை இயக்கிய நார்தன் இயக்கத்தில் யஷ் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த 'முப்டி' படம்தான் தற்போது சிம்பு, கவுதம் கார்த்திக் நடிக்க தமிழில் 'பத்து தல' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. முதலில் இப்படத்தை இயக்க ஆரம்பித்த நார்தன் பின்னர் விலகிவிட்டார்.

'கேஜிஎப் 3' படம் உருவாக இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகலாம். பிரசாந்த் நீல் 'சலார், ஜுனியர் என்டிஆர் 31' படங்களை முடித்த பிறகே 'கேஜிஎப் 3' படத்திற்கு வர முடியும். எனவே, யஷ் அடுத்து ஒரு பான்--இந்தியா படத்தில் நடிக்காமல், ஒரு கன்னடப் படத்தில்தான் நடிப்பார் என உறுதியாகக் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடுதனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' ... முடிவுக்கு வந்தது அநீதி முடிவுக்கு வந்தது அநீதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
24 மே, 2022 - 14:09 Report Abuse
KayD இனி இவர் என்ன படம் நடிச்சாலும் பெரிய அளவில் ரீச் ஆகாது. Prabas மாதிரி bahubali la famous aaitu adhuku பிறகு ஒரு success ku waiting இன்னும் வரல. Same story தான் இவருக்கும்.. Oru முத்திரை குத்தி விட்டது இனி கஷ்டம் sucess
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in