பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் | டாலடிக்கும் ரத்தினமே - நயனை வர்ணிக்கும் விக்கி | ‛‛தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்'' - திரைப்பிரபலங்களின் சுதந்திர தின கொண்டாட்டம் | இணையத்தில் கசிந்த விஜய்யின் வாரிசு படக் காட்சி | இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் |
தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே ஒரு படம் 100 நாளைக் கடப்பதெல்லாம் அபூர்வமாகிவிட்டது. திருட்டு விசிடிக்கள் பத்து வருடங்களுக்கு முன்பு சினிமாவை பெரிதும் பாதித்தது. அப்போதிலிருந்தே மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பதை குறைத்துக் கொண்டார்கள். படம் வெளியான அன்றே திருட்டு விசிடியில் படங்கள் வெளிவந்தது. பத்து ரூபாய்க்கே புதிய பட சிடிக்கள் கிடைத்தன. அதன்பின் படங்கள் பத்து நாட்களைத் தாண்டுவதற்கே தள்ளாட வேண்டியதாகிவிட்டது.
கடந்த பத்து வருடங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே 100 நாட்களைக் கடந்த படங்களாக இருக்கின்றன. நன்றாக ஓடும் சில படங்கள் 50 நாட்களைக் கடந்துள்ளன. அந்தப் பட்டியலில் ஓரளவிற்காவது சில படங்கள் இருக்கின்றன. இப்போதெல்லாம் ஒரு படத்தின் அதிகபட்ச ஓட்டமே 10 நாட்கள்தான். இது தியேட்டர் வெளியீட்டிற்கானது.
ஆனால், ஒடிடியில் வெளியாகும் படங்களுக்குக் கூட 50, 100 நாட்கள் என சில படக்குழுவினர் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அவை கூட பரவாயில்லை. இன்று 200 நாள் என 'ஜெய் பீம்' படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஓடிடியில் கடந்த வருடம் நவம்பர் 2ம் தேதி வெளியான படம் இது. சூர்யா, லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பும், விமர்சகர்களிடம் பெரும் பாராட்டும் கிடைத்தது. அதேசமயம் கடும் சர்ச்சைகளையும் சந்தித்தது.
ஓடிடியில் வெளியான ஒரு படத்திற்கு 200 நாள் போஸ்டரா என்பது ஆச்சரியம்தான். அது சரி, எப்படியும் தினமும் ஒரு சிலராவது இந்தப் படத்தை ஓடிடியில் பார்த்திருக்க வாய்ப்புள்ளதுதானே ?. அதனால் அடுத்து 300 நாள், 365 நாள் என போஸ்டர்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.