கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! | அருண் - அர்ச்சனா காதலை கன்பார்ம் செய்த புகைப்படம்! | 'ஜெய் ஹிந்த்' என சொல்ல மறுத்தது ஏன்? சூர்யாவுக்கு காயத்ரி கடும் எச்சரிக்கை! | நலமாக இருக்கிறேன்: ஸ்ருதிஹாசன் தகவல் | டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா |
1980 - 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம், உயிரே உனக்காக உள்பட இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற ஆக்சன் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் மோகன். தந்தை - மகள் செண்டிமென்ட் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. சாருஹாசன், குஷ்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த ஹரா படத்தில் தனது மகளுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் மோகன் விடுமுறை கேட்கும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். இப்படியான நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் இடத்திலும் ஹரா படக்குழு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதில், பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டில் இதுபோன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்திலும் பெண்களுக்கு மூன்று நாள் விடுமுறை அளித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.