புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை | இரண்டாம் திருமணத்திற்கு பின் இமான் போட்ட ‛மியூசிக்' - முதல் மனைவி இரைச்சல் |
1980 - 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம், உயிரே உனக்காக உள்பட இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட்டாகின. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்ஸ்ரீ இயக்கத்தில் ஹரா என்ற ஆக்சன் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் மோகன். தந்தை - மகள் செண்டிமென்ட் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. சாருஹாசன், குஷ்பு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த ஹரா படத்தில் தனது மகளுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்திடம் மோகன் விடுமுறை கேட்கும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம். இப்படியான நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் இடத்திலும் ஹரா படக்குழு ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதில், பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டில் இதுபோன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் தமிழகத்திலும் பெண்களுக்கு மூன்று நாள் விடுமுறை அளித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் அந்த கோரிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.