ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை |
பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் நடித்த படம் ஆர்ஆர்ஆர். கடந்த மார்ச் 25ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. பாகுபலி அளவிற்கு படம் பேசப்படவில்லை என்றாலும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து தயாரிப்பாளருக்கு பெரும் லாபத்தை கொடுத்தது. படம் வெளியாகி 50 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளத்திற்கு வந்துள்ளது. வருகிற மே 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் காணலாம். இதில் முக்கிய அம்சமாக 4கே ஒளி தரத்திலும், டால்பி அட்மாஸ் ஒலி தரத்திலும் வெளியாகிறது.