Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மத்திய அரசை விமர்சித்து பாடல்: கமல் மீது போலீசில் புகார்

13 மே, 2022 - 12:04 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-Kamal

அரசியலில் தொடர் தோல்விகளை சந்தித்த கமல்ஹாசன் தற்போது சினிமாவில் அதிக அக்கறை காட்டி வருகிறார். அவர் நடித்து வரும் விக்ரம் படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரம் காட்டுகிறார். இதன் ஒரு பகுதியாக படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கமல்ஹாசனே எழுதி பாடி உள்ளார்.

அந்த பாடலில் "கஜானாலே காசில்லே... கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே... சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் கமல்ஹாசன் மீது புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள 'விக்ரம்' திரைப்படத்தில் வரும் 'பத்தல பத்தல' என்ற பாடல் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் சாதிய ரீதியான பிரச்னைகளை தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது. எனவே விக்ரம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும். மேலும், மத்திய அரசை விமர்சித்து பாடல் வெளியிட்ட கமல்ஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
தோனி தயாரிப்பில் நயன்தாரா : மறுப்பு அறிவிப்புதோனி தயாரிப்பில் நயன்தாரா : மறுப்பு ... காதல் கதையில் அஞ்சலி நாயர் காதல் கதையில் அஞ்சலி நாயர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

BalaG -  ( Posted via: Dinamalar Android App )
13 மே, 2022 - 15:14 Report Abuse
BalaG சமூக ஆர்வலர்னு சொல்றீங்க அப்புறம் ஏன் அவர் ஒன்றிய அரசுக்கு ஆதரவா புகார் தரணும்? எங்கையோ இடிக்குதே?
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
13 மே, 2022 - 12:19 Report Abuse
ram சும்மாக இருந்தால் இந்த படம் வந்தது போனது தெரியாமல் அமுங்கி விடும், இது தேவை இல்லாத விளம்பரம்,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in