அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை ஐபிஎல் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு சொந்தமான நிறுவனம் தோனி என்டர்டெயின்மெட். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படம் ஒன்று தமிழில் தயாராக உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது.
அதை தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மறுத்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சஞ்சய் என்பவருடன் தோனி என்டர்டெயின்ட் நிறுவனம் எந்தவிதமான வேலையையும் செய்யவில்லை. இப்படியான மோசடி தகவல்கள் மீது எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்கிறோம். எனினும், எங்களது நிறுவனம் பலதரப்பட்ட திட்டங்களுக்கான வேலையில் ஈடுபட்டு வருகிறது, அவற்றை விரைவில் உங்களுடன் பகிர்வோம்,” என்று அறிவித்துள்ளது.
சஞ்சய் என்பவர் ரஜினிகாந்த்திடம் பணி புரிந்தவர் என்றும், அவர் தான் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் முக்கிய பணியில் இணைந்துள்ளார் என்றும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்தது. அதை தற்போது தோனி நிறுவனமே மறுத்துள்ளது.
அதேசமயம் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிப்பது பற்றி எந்த அறிவிப்பையும் அவர்கள் வெளியிடவில்லை. இதனால் அவர் நடிக்கிறாரா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது.