அழியாத கோலங்களாய் தலைமுறைகள் கடந்து வாழும் பாலுமகேந்திரா | ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த 'கேஜிஎப் 2' படம் கடந்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியானது. படத்திற்கான வரவேற்பும், வசூலும் கடந்த ஒரு மாத காலமாக சிறப்பாக இருந்து வருகிறது. இன்று இப்படம் ஐந்தாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
100 கோடி ரூபாய் செலவில் தயாராகி 350 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு 1200 கோடி வசூலை இப்படம் குவித்துள்ளது. கன்னடத்தில் 175 கோடி, தெலுங்கில் 130 கோடி, தமிழ்நாட்டில் 110 கோடி, கேரளாவில் 65 கோடி, வட இந்தியாவில் 505 கோடி, வெளிநாடுகளில் 190 கோடி என இப்படம் ஒவ்வொரு ஏரியாவிலும் விற்கப்பட்ட விலையை விட நன்றாக வசூலித்து லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
ஒரு கன்னடத் திரைப்படம் மற்ற மொழிகளில் நேரடியாக வெளியான படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் 'பீஸ்ட்', தெலுங்கில் 'ஆச்சார்யா', ஹிந்தியில் 'ஜெர்சி, ஹீரோபன்ட்டி, ரன்வே 34' உள்ளிட்ட படங்களின் போட்டிகளையும் வெற்றிகரமாக சமாளித்தது. இந்த வார இறுதி வரை ஓடி மேலும் சில கோடிகளை இப்படம் வசூலிப்பது உறுதி. அதற்குப் பிறகும் ஓடிடியில் வெளியாகும் வரை குறைவான தியேட்டர்களில் படம் ஓட வாய்ப்புள்ளது.