Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்டு கிண்டலடித்த படம் 'குருவி'யா ?

10 மே, 2022 - 12:47 IST
எழுத்தின் அளவு:
Is-RJ-Balaji-trolled-Kuruvi-movie?

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் மற்றும் பலர் நடிக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தின் டிரைலர் நேற்று சென்னையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், ஆர்யா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆர்ஜே பாலாஜி, “உதயநிதியை எனக்கு 12 வருஷமா தெரியும். அவர் அப்ப நடிக்க வரலை, தயாரிப்பாளராதான் இருந்தாரு. அப்போ பேசின ஒண்ணு ஞாபகம் இருக்கு. ரொம்ப நேரம் நாங்க சினிமாவைப் பத்தி பேசிட்டிருக்கும் போது நான் கேட்டேன். என்ன உதய், நீங்க இவ்ளோ சொல்றீங்களே, எப்படி அந்தப் படத்தைத் தயாரிச்சீங்கன்னு ஒரு படத்தைப் பத்தி கேட்டேன்.

அவர் என் தோள்ல கை போட்டு, 'எனக்கும் ஒரு டவுட்டு இருந்தது. நானும் எடுத்தவர் கிட்ட போய் கேட்டேன். என்ன படம் சுமாரா இருக்கேன்னு கேட்டேன். அதற்கு அவர் இன்னொரு வாட்டி எடுக்கலாமான்னு சொன்னாரு. ஐயோ சார் ஆளைவிட்ருங்கன்னு வந்தேன்,” அப்படின்னு உதய் என் கிட்ட சொன்னாரு,” என்றார்.

ஆர்ஜே பாலாஜி பேசி முடித்ததும் அது என்ன படம் என்பதை பக்கத்தில் அமர்ந்திருந்த சிவகார்த்திகேயனிடம் கிசுகிசுத்தார் உதயநிதி ஸ்டாலின். ஆக, அது என்ன படம் என்பது ஆர்ஜே பாலாஜி, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும், அந்தப் படத்தை இயக்கியவருக்கும்தான் தெரிந்திருக்கும்.

பாலாஜி பேசும் போது உதயநிதி அப்போது நடிக்க வரவில்லை என்றார். உதயநிதி நாயகனாக நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் 2012ம் ஆண்டுதான் வெளிவந்தது. அதற்கு முன்பு அவர் தயாரித்த படங்கள் “குருவி, ஆதவன், மன்மதன் அம்பு, ஏழாம் அறிவு'. இவற்றில் 'ஆதவன், ஏழாம் அறிவு' சுமாரான படங்கள். 'குருவி, மன்மதன் அம்பு' தோல்விப் படங்கள். 'மன்மதன் அம்பு' கமல்ஹாசன் படம் என்பதால் சொல்லியிருக்க வாய்ப்வில்லை. எனவே, 'குருவி' படத்தைத்தான் சொல்லியிருக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விண்ணைத்தாண்டி வருவாயா 2 எப்போது? : கவுதம் மேனன் பதில்விண்ணைத்தாண்டி வருவாயா 2 எப்போது? : ... பிறந்தநாளில் கர்ப்ப அறிவிப்பை போட்டோஷுட் மூலம் வெளியிட்ட நமீதா பிறந்தநாளில் கர்ப்ப அறிவிப்பை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

mukundan - chennai,இந்தியா
11 மே, 2022 - 11:49 Report Abuse
mukundan இது மன்மதன் அம்பு படம் தான். அதை எடுத்தவர் கமல். அவர் தான் திரும்ப எடுக்கட்டும் என்று நக்கலாக கேட்டு இருப்பார். குருவி டைரக்டர் தரணி அப்படி சொல்லி இருப்பார்னு தோணலை.
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
11 மே, 2022 - 09:37 Report Abuse
கல்யாணராமன் சு. சே குவேரா படம் தயாரிப்பாளராக இருந்தது 2006 லிருந்து இருக்குமா? அதாவது 27 வயசிலிருந்து.. இவருக்கு படம் தயாரிக்க எங்கிருந்து பணம் கிடைத்தது? saravana கடை owner ராவது வியாபாரம் பண்ணி பணம் சம்பாதிச்சாரு ... சேகு என்ன செஞ்சு பணம் ஈட்டினார்? சும்மாவா சொன்னாங்க, கட்டுமரம் குடும்பம் ஊழலிலேயே திளைத்ததுன்னு ??
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
11 மே, 2022 - 08:42 Report Abuse
M.Sam இது எல்லாம் ஒரு செய்தி இவரு பெரிய அப்பா டக்கர் வேற எத்தனையோ செயதிகள் இருக்க எதை போட்டு எங்க நேரத்தை வீண் அடிக்க வேண்டாம்
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
10 மே, 2022 - 13:49 Report Abuse
தமிழன் இந்த உளறுவாயன் ஐபிஎல் போட்டிகளில் தமிழில் வர்ணனை செய்ய வந்து கேனத்தனமாக உளறுவதை எல்லாரும் வெறுக்கிறார்கள். நானும்தான். இதனாலேயே நான் ஆங்கில வர்ணனை போட்டிக்கு மாறிவிடுகிறேன். கருமம்...சரியான உளறுவாயன் இவன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in