Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேண்டுமென்றே வசனம் வைக்கிறாரா நடிகர் விஜய் - படத்தை ஓட வைக்க 'டெக்னிக்'கா?

13 ஏப், 2022 - 14:00 IST
எழுத்தின் அளவு:
Is-actor-Vijay-deliberately-puts-dialogues-in-Movies?

சென்னை : விஜய் நடித்த ‛பீஸ்ட்' படம் இன்று(ஏப்., 13) வெளியாகி உள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள ஹிந்தி மொழி தொடர்பான வசனம் வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படத்தை ஓட வைப்பதற்காக ஒவ்வொரு படத்திலும் இப்படி ஏதாவது ஒரு விஷயத்தை வலிய திணிப்பதை விஜய் வழக்கமாக வைத்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் படம் என்றாலே ஏதாவது சர்ச்சை என தொடர் கதையாகிவிட்டது. ஆனால் அதுவே படத்திற்கு பெரும் பப்ளிசிட்டி ஆகி விடுவதால் வேண்டுமென்றே சில சர்ச்சையான விசயங்களை திணிக்கிறார்களோ என எண்ண தோன்றுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் இன்று(ஏப்.,13) திரைக்கு வந்துள்ள படம் ‛பீஸ்ட்'. இப்படத்தின் டிரைலர் வெளியான போதே படத்தில் பயங்கரவாதிகளை முஸ்லீம்களாக சித்தரித்து இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்கு சென்றது.

இந்நிலையில் இப்படத்தில் ஒரு வசனம் வருகிறது. காஷ்மீரில் உள்ள பயங்கரவாதியிடம் பேசும் விஜய், ‛‛உனக்கு ஒவ்வொரு முறையும் ஹிந்தியில் மொழிபெயர்ப்பு செய்ய முடியாது. உனக்கு வேணும்னா தமிழ் கத்துக்கிட்டு வா'' என பேசுகிறார். ஏற்கனவே தமிழகத்தில் ஹிந்தி தொடர்பான சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போது இவர் ஹிந்தியை எதிர்ப்பது போன்ற வசனத்தை வலிய திணித்து இருப்பதாக தெரிகிறது. இந்த வசனம் டிரெண்ட் ஆகும் அதேசமயம் தேவையின்றி சர்ச்சையையும் கிளப்பி உள்ளது.


இது மாதிரியான வசனம் விஜய் படத்தில் இடம் பெறுவது புதிதல்ல. ஏற்கனவே இவரது ‛மெர்சல்' படத்தில் இடம் பெற்ற ‛ஜிஎஸ்டி' தொடர்பான வசனம், ‛சர்கார்' படத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை தீயிட்டு எரிப்பது மாதிரியான காட்சி, கத்தி படத்தில் இடம் பெற்ற ‛2ஜி' ஊழல் தொடர்பான வசனம்... என சொல்லிக் கொண்டே போகலாம்.

எதிர்கால அரசியல் கனவில் இருக்கும் விஜய் எந்த ஒரு பொது பிரச்னையாக இருந்தாலும் அதற்கு நேரடியாக குரல் கொடுத்தது இல்லை. ஆனால் படங்கள் வெளியாகும் சமயத்தில் மட்டும் ஆடியோ விழாவில் ஏதாவது பரபரப்பாக பேசி, அதையே படத்திற்கு பப்ளிசிட்டியாக மாற்றிக் கொள்வார். தனது படங்களிலும் விவாதத்திற்கு உள்ளாகும் விஷயங்களை கண்டிப்பாக இடம் பெற செய்கிறார். கடந்த ஐந்தாண்டுகள் இது தொடர் கதையாகி வருகிறது. இவை எல்லாமே தனது படத்திற்கு கல்லா கட்ட பார்க்கும் விளம்பர உத்தியாக தான் பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினி இது போன்று தான் செய்து வந்தார். அவரைப்போன்று விஜய்யும் அதே ஸ்டைலை கையில் எடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வாத்தி படப்பிடிப்பில் தனுஷ்மீண்டும் வாத்தி படப்பிடிப்பில் ... சினேகா வெளியிட்ட  கியூட்  புகைப்படம் சினேகா வெளியிட்ட கியூட் புகைப்படம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in