Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஏப்ரல் 17ல் ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம்

05 ஏப், 2022 - 10:46 IST
எழுத்தின் அளவு:
Ranbir---Alia-to-marry-on-April-17

பாலிவுட்டின் அடுத்த நட்சத்திர திருமணமாக நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஆலியா பட் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வரும் இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தது.

அந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் தற்போது வந்துவிட்டது. வரும் ஏப்ரல் 17ம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு நெருக்கமானவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆலியாவின் தாத்தா ஒருவர் உடல்நலக் குறைவாக இருக்கிறாராம். தனது பேத்தியின் திருமணத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டதால் இப்போது திருமணம் நடைபெறுவதாகத் தெரிகிறது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என மும்பையில் உள்ள ஆர்கே ஸ்டுடியோஸில் இத்திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

ஆலியா, ரன்பீர் இருவருமே பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளார்கள். இருவரும் இணைந்து நடித்துள்ள 'பிரம்மாஸ்திரா' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில்தான் முடிந்தது. ஆலியா பட் தெலுங்கில் அறிமுகமான 'ஆர்ஆர்ஆர்' படம் கடந்த மாதக் கடைசியில் வெளியாக தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆலியா, ரன்பீர் இருவரும் தங்களது திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், முதலில் நடத்த உள்ள பேச்சுலர் பார்ட்டிக்கு யார் யாரை அழைக்கலாம் என ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ராஜமவுலியை சந்திப்பதற்காக விக்குடன் சென்ற பாலிவுட் நடிகர்ராஜமவுலியை சந்திப்பதற்காக ... அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்பும் ஷாகித் கபூர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்பும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Chellah Anand - chennai,இந்தியா
06 ஏப், 2022 - 05:09 Report Abuse
Chellah Anand அப்பாவும் பொண்ணும் போல் தெரிகிறார்கள்
Rate this:
ஆக .. - Chennai ,இந்தியா
05 ஏப், 2022 - 17:23 Report Abuse
ஆக .. ஆலியாவின் தாத்தா ஒருவர் ....ஆசியா அப்பாவே தாத்தா ரேஞ்சுக்கு தான் தெரிகிறார் ...73 வயசு அம்மா 65 வயசு ...
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
05 ஏப், 2022 - 22:09Report Abuse
Bye Passஏகப்பட்ட தாத்தாக்கள் இருக்கிற மாதிரி .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in