Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆமீர்கான் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்? நாக சைதன்யா கொடுத்த விளக்கம் | நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்! | முருகன் ஆல்பத்தின் வசூலை திருச்செந்தூர் கோவிலுக்கு வழங்கும் தேவா! | விரைவில் சந்திக்கிறேன்- அடுத்த படத்தை அறிவிக்க போகிறாரா லெஜண்ட் சரவணன்? | தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்ட ஷில்பா மஞ்சுநாத்! | அஜய் தேவ்கனை சந்தித்த குஷ்பூ | ஜானி மாஸ்டருக்கு நன்றி சொன்ன ஜாக்குலின் பெர்னாண்டஸ் | போர்க்கப்பலை பார்வையிட்ட மோகன்லால் ; அதிகாரிகள் உற்சாக வரவேற்பு | அது என்னுடைய கார் அல்ல ; ஷாஜி கைலாஷ் விளக்கம் | 6 வருடமாக டார்ச்சர் கொடுத்த விமர்சகர் ; நித்யா மேனன் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சலசலப்பை ஏற்படுத்திய நாசரின் அறிக்கை

29 ஜன, 2022 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Why-nassar-use-that-word?

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிலும் தனது முக்கிய பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை சவுகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார். இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய அரசு தற்போது இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது. இதற்கு திரையுலகிலும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த பத்மஸ்ரீ விருதை சவுகார் ஜானகிக்கு வழங்கி கவுரவி்த்ததற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் நாசர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சவுகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருதை அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறி உள்ளார். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வார்த்தை தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சிதான் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசை கிண்டல் செய்யும் விதமாக ஒன்றிய அரசு என்கிற பெயரில் அழைத்து வருகிறது. இப்படி அழைப்பது ஏற்கனவே பல தரப்பினரிடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒரு கலைஞர், அதிலும் முன்னாள் நடிகர் சங்க தலைவர் என்பவர் மத்திய அரசு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாமல் ஒன்றிய அரசு என்று கூறுவது ஒரு சார்புத்தன்மை உடையதாகவும் உள்நோக்கம் கொண்டதாகவும் இருக்கிறது என சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் - அஜித்துடன் நீண்ட இடைவெளிக்குப்பின் கைகோர்க்கும் பிரகாஷ்ராஜ்விஜய் - அஜித்துடன் நீண்ட ... விஜய் தேவர்கொண்டாவை ஓவர்டேக் செய்த அல்லு அர்ஜூன் விஜய் தேவர்கொண்டாவை ஓவர்டேக் செய்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

V.B.RAM - bangalore,இந்தியா
02 பிப், 2022 - 17:33 Report Abuse
V.B.RAM ஒரு முறை ஒரு முறை 360 பயன்படுத்தினால் போதும் .எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
31 ஜன, 2022 - 04:01 Report Abuse
meenakshisundaram அடுத்த விருது தனக்கே தரவேண்டும் என்று 'வேண்டுகோள் '-பிச்சை ?
Rate this:
gilbert - vienna,ஆஸ்திரியா
31 ஜன, 2022 - 00:54 Report Abuse
gilbert இவனுங்கெல்லாம் என்னாதான் குதிரை வேஷம் போட்டாலும் கத்தும்போது இனம் என்னான்னு நல்லாவே தெரியுது.
Rate this:
sugumaran - chennai,இந்தியா
30 ஜன, 2022 - 18:37 Report Abuse
sugumaran நாசர் இப்படு சொல்வதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை, இந்த விடயமூஞ்சி ஆட்சியின் கைகூலியிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்.
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
30 ஜன, 2022 - 16:11 Report Abuse
Sathyanarayanan Bhimarao இது தமிழ்னாட்டுக்கு உட்பட்ட பகுதியா இவர்கள் இஷ்டப்படி பெயர் மாற்ற, மத்திய அர்சு மனோன்மணியம் சுந்தர்ம் பிள்ளை எழுதிய கடவுள் வாழ்த்தையே இஷ்டப்படி மாற்றியவர்கள் மத்திய அரசிசின் பெயரை மாற்றுவது கண்டனத்துக்குரியது.. மத்திய அரசு தலையிட்டு இந்த அதிகப் பிரசங்கத்துக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். உடனே இந்தப் பெயர் மாற்றத்துக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in