Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ஆண்டாவது வருவாரா 'இந்தியன் 2' ?

25 ஜன, 2022 - 10:56 IST
எழுத்தின் அளவு:
Will-Indian-2-release-next-year?

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இந்தியன் 2'.

மூன்று வருடங்களுக்கு முன்பு 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமானது. அதன்பின் போபால், ஐதராபாத் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெற்றது. 2020ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது கிரேன் விபத்து ஏற்பட்டு மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு உதவித் தொகையும் அளிக்கப்பட்டது.

இருப்பினும் உடனடியாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் கொரோனா தாக்கம் வந்ததால் படப்பிடிப்பு தாமதமானது. மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்ற நிலையில் ஷங்கர் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர்ந்த பிறகுதான் அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சினை வெளியில் வந்தது. அதன் பின் நடந்த விசாரணை, தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகலாம் என்றார்கள். ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவேயில்லை.

இதனிடையே, ஷங்கர் தெலுங்குப் படம், ஹிந்திப் படம் என இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை கடந்த செப்டம்பர் மாதமும் ஆரம்பித்துவிட்டார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இப்படத்தை இயக்கும் வேலைகளில் மட்டுமே ஷங்கர் ஈடுபடுவார் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியென்றால் 'இந்தியன் 2' பட வேலைகள் எப்போது ஆரம்பமாகும் என கோலிவுட்டிலும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தெலுங்குப் படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அப்போது 'இந்தியன் 2' வின் முந்தைய படப்பிடிப்புகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் மூன்று வருடம் பழையதாக இருக்கும். மூன்று வருட இடைவெளியில் நடிகர்கள், நடிகைகளின் தோற்றத்தில் மாறுதல் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அவற்றையெல்லாம் சரி செய்து எடுப்பது சாதாரண விஷயமல்ல.

ஷங்கர், கமல்ஹாசன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்த 'இந்தியன் 2' படத்தின் நிலைமை இப்படியாகிவிட்டதே என கமல்ஹாசன் ரசிகரகள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களது கவலையை தீர்த்து வைக்க வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமை.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கர் - ராம்சரன் படம் 2023 சங்கராந்திக்கு வெளியீடுஷங்கர் - ராம்சரன் படம் 2023 ... முழுமையாக 'டிராப்' செய்யப்பட்ட 'பாகுபலி' வெப் சீரிஸ் முழுமையாக 'டிராப்' செய்யப்பட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

N. Srinivasan - Chennai,இந்தியா
26 ஜன, 2022 - 10:56 Report Abuse
N. Srinivasan நமது இந்தியன் யோசித்துக்கொண்டு இருக்கிறார் இந்த முறை யாரை குறை கூறலாம் கூறக்கூடாது என்று பின்பு தான் வருவார். தற்போது எதுவும் தேர்தல் இல்லையே இருந்தால் ஆவது அதை வைத்து படம் காண்பிக்கலாம் என்று நினைப்பார்
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
25 ஜன, 2022 - 17:58 Report Abuse
Shekar வரும் ஆனா வராது.
Rate this:
radha - tuticorin,இந்தியா
25 ஜன, 2022 - 17:33 Report Abuse
radha அது என்ன இந்தியன் - 2. ஒன்றியன் - 2 அப்படின்னு பேர் மாத்துங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in