நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
தொகுப்பாளினியாக அறிமுகமான காஜல் பசுபதி, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகையாக வலம் வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட காரணத்தால், பிக்பாஸ் குறித்து இவர் பதிவிடும் போது அவை வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், சினிமா, நாட்டு நடப்பு பற்றி கருத்துகள் பேசி வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சக போட்டியாளர் இவரை தகாத வார்த்தையில் பேசிவிட அவரிடம் பயங்கரமாக கத்தி சண்டை போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள் இவரை கிண்டல் செய்தனர். அவர்களுக்கு பதிலளித்த காஜல், 'லூசு மாதிரி கோபப்படாம ஒரு ஷோல இருந்து வெளிய வந்தா காமெடி பீஸ்னு சொல்றது. அங்க ஒருத்தன் கெட்ட வார்த்தைல திட்டுறான், அதுக்கு வாய மூடிட்டு இருக்காம கோபப்பட்டா பஜாரின்னு சொல்றது.. என்னடா உங்க நியாயம்' என்று பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து காஜல் பசுபதியை 'அக்கா நீங்க பிக்பாஸ் ஓடிடி போங்க' என்று சொல்ல, அதற்கும் பதிலளித்த காஜல், 'கூப்பிடமாட்டாங்களே' என நக்கலாக பதில் அளித்துள்ளார்.