Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

50 வருடம் முன்னோக்கி செல்லும் கதையில் நடிக்கும் சூர்யா

12 ஜன, 2022 - 22:25 IST
எழுத்தின் அளவு:
Surya-stars-in-a-story-that-goes-50-years-forward

தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜெய்பீம் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக பாலா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அதையடுத்து ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு சூர்யா கால்சீட் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு அந்த கதை ஐம்பது வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் எந்த மாற்றங்கள் நடக்கும், மக்களின் அவசர வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு கற்பனையில் இந்த படம் உருவாகிறது. இந்தப்படத்தின் கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் மட்டுமே ஒரு வருடம் நடைபெற உள்ளதாம். அதனால் அடுத்தாண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் நிக்கி கல்ராணி!கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் ... நயன்தாராவின் புதிய பிசினஸ் நயன்தாராவின் புதிய பிசினஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Aarkay - Pondy,இந்தியா
13 ஜன, 2022 - 10:00 Report Abuse
Aarkay நாலடியார் அதிலும் leftist-களுக்கு குடை பிடிப்பார். காவியைக்கண்டால் அலறுவார். anti Modi வசனங்களுமிருக்கும். ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலை போன்ற வசனங்கள் கண்டிப்பாய் இடம் பெரும். நாலு டயலாக் சொன்னால், நமக்கும் சமூக அக்கறை உள்ளது போலத்தானே
Rate this:
LAX - Trichy,இந்தியா
13 ஜன, 2022 - 02:38 Report Abuse
LAX Oh.. 1, 2, 3, 4, 5...... னு எண்ண முடியாம, ஸ்ரெயிட்டா.. 'அசிங்கம் 50' போல.. 😂 😂 😂 😂
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in