'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா | உண்மையாகவே மது அருந்தினாரா நானி |
இந்தியத் திரையுலகின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. தமிழில், “அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா, சிங்காரவேலன்' உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
பாவலர் கிரியேஷன்ஸ் என்ற அந்த நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து 30 ஆண்டு காலம் ஆகிவிட்டது. சமீப காலமாக இளையராஜாவும், ரஜினிகாந்தும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரஜினியிடம், தனது நிறுவனத்துக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டதாகவும் அதற்கு ரஜினி சம்மதம் சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இளையராஜா மீது மிகுந்த அபிமானம் கொண்டு பாலிவுட் இயக்குனரான பால்கி, ரஜினியை சந்தித்து கதையைக் கூறியதாகவும், அந்தக் கதையும் ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கலாமா, தமிழில் தயாரிக்கலாமா என்று பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் அது பற்றி முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.