‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
பிக்பாஸ் 5 நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான போது ஹிப் ஹாப் ஆதி நடித்த 'அன்பறிவு' படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த படத்தை புதுமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், ஹிப் ஹாப் ஆதி மற்றும் இயக்குநர் அஸ்வின் ஆகியோர் கமல்ஹாசனுடன் இருக்க, அகம் டிவியின் வழியே கமல் போட்டியாளர்களுடன் பேசினார். அப்போது பேசிய சஞ்சீவ், இயக்குநர் அஸ்வின் ராமை பார்த்ததும் எமோஷ்னலாகி விட்டார்.
பிரபல நடிகை சிந்துவின் தம்பி தான் சஞ்சீவ். சிந்துவுக்கு ஸ்ரேயா என்ற மகள் இருந்த நிலையில் 33 வயதிலேயே சிந்து உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து ஸ்ரேயாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு தாய் மாமனான சஞ்சீவை சேர்ந்தது. ஸ்ரேயாவுக்கும், இயக்குநர் அஸ்வின் ராமுக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திரைத்துறையில் நீண்ட நாட்களாக இயக்குநராக போராடி வந்த அஸ்வின் ராம், இன்று தனது முதல் வெற்றியை தொட்டுள்ளார். இந்நிலையில் தான் தனது இறந்து போன அக்காவையும், ஸ்ரேயா மற்றும் அஸ்வினையும் நினைத்து சஞ்சீவ் எமோஷ்னலாகி அழுதபடி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.