கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | மோகன்லால் மீதான யானை தந்தம் வழக்கு: 3 வாரத்தில் விசாரணையை முடிக்க கோர்ட் உத்தரவு | ஆட்டோவில் சென்ற நடிகையிடம் அத்துமீறிய போலீஸ் | ராம் படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் | சேகர் படத்தின் தடை நீக்கம் ; மறு ரிலீஸ் தேதி பரிசீலனை | ரிட்டர்ன் டிக்கெட்டை காட்டினால் மட்டுமே ஜாமீன் ; நடிகருக்கு நீதிமன்றம் செக் | விசாரணை தடம் மாறுகிறது : பாதிக்கப்பட்ட நடிகை நீதிமன்றத்தில் மனு | 2022ல் ஹாட்ரிக் வெளியீட்டில் கார்த்தி | போர்கொண்ட சிங்கம் : 'விக்ரம்'-ன் அடுத்த பாடல் வெளியீடு | ‛தி கிரேமேன்' டிரைலர் தமிழிலும் வெளியானது - வில்லனாக தனுஷ் |
பிரமாண்டமான படங்களை எடுப்பது போலவே புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரமாண்டம் காட்டும் பணியையும் செய்து வருகிறார் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜாமவுலி. தற்போது ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கனை வைத்து அவர் இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பரபரப்பாக இருக்கிறார். அந்தவகையில் சமீபத்தில் தென்னிந்தியா முழுவதும் படக்குழுவினருடன் சுற்றிய ராஜமவுலி இந்தப்படத்தின் ஹிந்தி வெளியீட்டிற்கான மாபெரும் புரமோஷன் நிகழ்ச்சியை மும்பையில் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரமாண்டம் காட்ட தீர்மானித்துள்ள ராஜமவுலி, ஐதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 3000 ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மும்பை வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இவர்கள் அனைவரும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ரசிகர்கள். இந்த மாபெரும் கூட்டத்தை கூட்டுவதன் மூலம் பாலிவுட்டில் ஆர்ஆர்ஆர் படத்திற்கான அதிர்வலைகளை ஏற்படுத்துவதற்கான ராஜமவுலியின் மாஸ்டர் பிளான் இது என்று சொல்கிறார்கள்.