Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ரஜினிகாந்த் - இளையராஜா கூட்டணி?

18 டிச, 2021 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Rajini---Ilayaraja-to-team-up-again?

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசூலில் சாதனை படைத்து வருபவராக ரஜினிகாந்த் இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'அண்ணாத்த' படம் விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், படம் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாகவும் ஒரு தகவல்.

இதனிடையே, ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூட அவர் கதை கேட்டதாக தகவல் வெளியானது. தற்போது மேலும் ஒரு தகவலாக ஹிந்தி இயக்குனரான பால்கி, சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதையைச் சொன்னதாகவும் அந்தக் கதையும் ரஜினிக்குப் பிடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

'சீனிகம், பா, ஷமிதாப், கி கா, பேட்மேன்' உள்ளிட்ட ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி ஒரு தமிழர். தற்போது 'சுப்' என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.

பால்கி, ரஜினிகாந்த் கூட்டணி இணைந்தால் அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கலாம் என்றும் சொல்கிறார்கள். ரஜினிகாந்த், இளையராஜா இருவரும் இணைந்து வெளியான கடைசி படம் 'வீரா'. 1994ல் வெளியான அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்தான். அதன்பிறகு கடந்த 27 வருடங்களாக இருவரும் மீண்டும் இணையவேயில்லை.

அந்த வாய்ப்பை பால்கி ஏற்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சிப் பாடலுக்கு வரவேற்பு : சமந்தா மகிழ்ச்சிகவர்ச்சிப் பாடலுக்கு வரவேற்பு : ... வசூலை குவிக்கும் ஸ்பைடர் மேன்: ஒரே நாளில் 33 கோடியை அள்ளியது வசூலை குவிக்கும் ஸ்பைடர் மேன்: ஒரே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

பாலா - chennai,இந்தியா
24 டிச, 2021 - 21:35 Report Abuse
பாலா ரெண்டு பேரும் ஓய்வு எடுக்க வேண்டிய வயசு ராசாவோட பளய மெட்ட இன்னும் போட்டு கேட்டு இன்புருகிறோம் ஆனால் அந்த மாதிரி பாட்டை இப்போ வர்ற படத்துல ஏன் கேக்க முடியல்ல கேட்டா ரசன மாறிடுச்சுன்னு சொல்வீங்க ஆனா ராசாவோட பளய பாட்டுக்கு ஒரு கூட்டம் (என்ன கூட்டம் உலக பெரும் கூட்டம் இன்னும் ஆட்டம் போடுது) இருக்கு அப்படி இருக்க சொல்லோ ஏன் அவர் இசையை இப்போ முன்ன மாதிரி இல்ல இது என்ன மாதிரி சாமானியனின் மில்லியன் ரூவா கேள்வி ஆனா பதில் ?? கிடையாது கிடைக்காது
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
19 டிச, 2021 - 09:46 Report Abuse
Mirthika Sathiamoorthi உளவியல் பிரகாரம் மனித மனம் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயம் தனக்கு வயதாயிடுத்து என்பது...வயது முதிர்ந்தவரிடம் போயி இன்னும் நீங்கள் இளமையாய் இருக்கீங்கன்னு சொல்லுங்க அப்புடியே புரிச்சுபோயிடுவான்.. தான் இளமையாய் இருக்க பலவகையில் போராடுறான் மனிதன்..தலை முடிக்கு சாயம் ட்ரெண்ட் உடை கட்டான உடல் இன்னும் பலப்பல...தன வயதையே ஒப்புக்கொள்ளாத ஒருவன் தான் கொண்டாடும் நாயகனை வயதானவனாக பாக்க ஒப்புக்கொள்வான்? உண்மை என்னவென்றால் இங்கே எதிர்மறை கருத்துப்போடும் யாரும் 40 ஐ கடந்தவர்களோ குறிப்ப பெண்களோ அல்ல. அதனால் அவர்களுக்கு அது புரியவில்லை..ரஜினி தன்னை கொண்டாடும் அந்த ரசிகனுக்கு புடிச்சமாதிரி நடிக்கிறார்..உனக்கு பிடிச்ச படம் பாரு இல்லையா பாக்காத? அவர் படம் தோல்வி வெற்றி இதனாலா உனக்கு என்ன? ரஜினியின் ரசிகர்களை மட்டும் பேசுபவர்கள் மறந்த ஓன்று ரஜினியின் ரசிகைகள்..தியேட்டரில் விசிலடிக்க மாட்டாங்க, முதல்நாள் முதல்காட்சின்னு அலையமாட்டாங்க. ஆர்ப்பாட்டம் இல்லமா ரஜினிபடத்தை கொண்டாடுங்க..உதாரணத்துக்கு ரஜினி ரசிகனுக்கே பிடிக்காத படம் எஜமான் அருணாச்சலம்...இரண்டும் ஹிட் அடிக்க முழுக்க காரணம் பெண்கள்..ஆண்பாவம் படத்தில் VK ராமசாமி பேசும் வசனம்.. தியேட்டர் காட்டினேன் என்னை கொண்டாடுறாங்கன்னு. அதேபடத்தில டைட்டில் பாடலில் வரும் வரி கொட்டகை வளர்ந்த பிறகு நாட்டில் குத்தம் கொறஞ்சிடுச்சுன்னு.. உண்மை.. திரையரங்க்குக்கு செகண்ட் ஷோ பாக்கபோகும் ஒரு கூட்டமே இருந்தது..இரண்டாம் ஆட்டம் முடிந்து கூட்டம் கூட்டமாய் இரவு ஒருமணிக்கு மேல் மக்கள் வீட்டுக்கு போன காலம்.. அப்போ தைரியமாய் பெண்கள் தனியே படம் பாக்க போனகாலம்.. கூட்டம் கூட்டமாய் பெண்கள் தனியே போயி ரசித்த ஒரே நாயகன் ரஜினி.. MGR க்கு அப்புறம்.. இன்னைக்கு எந்த திரையரங்குக்கும் இரண்டாம் காட்சிக்கு ஆட்களே இல்லை... நூறுநாட்கள் ஓடி வெற்றிவிழா கொண்டாடுவது போயி.. மூணே நாளில் சக்ஸஸ் மீட்... இந்தக்காலத்தில் படங்கள் மக்கள் நினைவில் நின்றது போயி ஏதோ படம் அப்படின்னு இருக்குதுங்க..சூராரபோற்று சர்பேட்டை ஜெயபீம் கொண்டாடிய படங்களை இப்போ யார் கொண்டாடுவது? அந்தக்காலத்தில் கொண்டாடிய படங்களை மரு ரிலீஸ் செய்யும் திரையரங்குகள் இருந்தன..புதுப்படங்களையும் பாக்கலாம் முன்பு கொண்டாடிய படங்களையும் தியேட்டரில் மறுபடியும் பாக்கலாம்..அதனால்தான் ஆயிரத்தில் ஒருவன் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டலில் மாற்றி மீண்டும் தியேட்டரில் கொண்டாட முடிந்தது...எங்கே இன்றைய காலகட்ட படங்களை மரு ரிலீஸ் செயுங்கள் எத்தனைபேரு கொண்டாடுறான் தெரியுமாம்? இன்னைக்கு இருக்கும் எந்த ஹீரோவுக்கும் இந்த பெண்கள் ரசிகைகள் கிடையாது..இன்னைக்கு எந்த ஹீரோ நடிச்ச படம் அத்தனையும் ஹிட் அடிக்குது? மாநாடுக்கு முன் சிம்புவின் படம்? சிம்புவைப்பார்த்துகேட்டோமா கவுரவம் ஒதுங்கிடுன்னு? சிம்புவே மூச்சுக்கு முந்நூறு தப என் ரசிகர்களேன்னு கதறும்போது, ரஜினி? ஒரு படம் ஓடுவதும் நஷ்டமாவதும் அந்த தயாரிப்பாளருக்கு லாபம் நஷ்டம்.. அவனுகளே கவலைப்படலை? வந்துட்டானுக கருத்து கந்தசாமிங்க..பணம்போட்டு படம் எடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க திரையில் காண ரசிக ரசிகையர் கூட்டம் இருக்க எதுக்கு கவுரவமஒதுங்கனும்? உனக்கு பிடிக்கலையா பாக்காத...
Rate this:
Sriniv - India,இந்தியா
18 டிச, 2021 - 22:38 Report Abuse
Sriniv Annatthe was commercially a flop. No story, proper or direction. Just because it comes from the 'S' house, people are afraid to comment that the movie is a flop.
Rate this:
Priyan Vadanad - Madurai,இந்தியா
18 டிச, 2021 - 18:29 Report Abuse
Priyan Vadanad ரஜினிக்கு என்ன ஆச்சு?? இன்னுமா துயரம்? கொஞ்சம் கவுரவமா இருந்துட்டு போகலாமே
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் தள்ளாத வயதில் இணைகிறார்கள்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Na Na
  • நா நா
  • நடிகர் : சசிகுமார் ,
  • இயக்குனர் :NV நிர்மல்குமார்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in