நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் | 75வது நாளில் 'விக்ரம்' | பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடரில் நாயகி நக்ஷத்திராவின் தங்கையாக கோகிலா கோபால் நடித்து வருகிறார். டிக் டாக் பிரபலமான கோகிலாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற அசை இருந்தது. இதனையடுத்து விடாமுயற்சியுடன் செயல்பட்ட அவருக்கு சீன் நம்பர் 62 என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து பெரிதாக வாய்ப்பு கிடைக்காத நேரத்தில் தான், அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு அமைந்தது. தற்போது தமிழும் சரஸ்வதியும் தொடரில் காவ்யா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவருக்கு மற்றொமொரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அன்பே வா தொடரில் கோகிலா கோபால், புதிய கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுக்கிறார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவரது திரைப்பயணம் வெற்றி பெற பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.