Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் | 75வது நாளில் 'விக்ரம்' | பார்ட் 1, 2 என ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஜேக்குலின்! கொதித்தெளிந்த ரசிகர்கள்! | நிவின்பாலி படம் மூலம் மலையாளத்தில் நுழையும் அனிருத் | இப்பவும் ரொம்ப லவ் பண்றேன், ஆனால்? விவாகரத்துக்கு வைஷ்ணவியின் பளீச் பதில்! | முடிவுக்கு வந்த 7 வருட கதை; வருத்தத்தில் ரசிகர்கள்! | விஜய்-67 ; தீவிர கதை விவாதத்தில் லோகேஷ் கனகராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடும் பாலகிருஷ்ணாவின் 'அகான்டா'

06 டிச, 2021 - 11:20 IST
எழுத்தின் அளவு:
Balakrishna-Akhanda-blockbuster-hit

தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா. அவருடைய படங்களில் உள்ள நம்ப முடியாத ஆக்ஷன் காட்சிகளுக்காகவே அவருக்கு மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம் உண்டு. ஒரு ஜாலிக்காகவாவது அவருடைய படங்களை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள்.

பாலகிருஷ்ணா நடித்த 'அகான்டா' என்ற படம் கடந்த வாரம் வெளியானது. தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தெலுங்கு ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாடி வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 55 கோடிக்கு வியாபாரமாகியுள்ள இந்தப் படம் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அந்த வசூலை எடுத்துவிட்டதாம். சில ஏரியாக்களில் படம் மூன்றாவது நாளிலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்றும் சொல்கிறார்கள். முதல் நாளிலேயே 20 கோடி ரூபாய் வசூலித்து இதுவரை வெளிவந்த பாலகிருஷ்ணா படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துவிட்டதாம். தற்போது படத்தின் ஹிந்தி வெளியீட்டு உரிமை 20 கோடி ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தெலுங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படமாக 'அகான்டா' படம் அமைந்துள்ளது. தெலுங்கில் அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் வெளிவர உள்ளன. 'அகான்டா'வின் வரவேற்பும் வெற்றியும் அந்தப் படங்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளன.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை உறுதிப்படுத்தும் பாரிஸ் ட்ரிப்?விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா காதலை ... மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ஆண்டோ காலமானார் மலையாளப் பின்னணிப் பாடகர் தோப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Yamunai Thuraivan - Chennai,இந்தியா
07 டிச, 2021 - 11:47 Report Abuse
Yamunai Thuraivan சிறந்த படம் என்று முக நூலில் கூறுகிறார்கள் . தமிழில் சாதி மோதலையும் ப்ராமன வெறுப்பையும் உமிழும் படங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு படம்
Rate this:
Rajagopal - Chennai,இந்தியா
06 டிச, 2021 - 22:57 Report Abuse
Rajagopal நீங்கள்லாம் இன்னும் திருந்தவே இல்லையா? போங்க. போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க.
Rate this:
06 டிச, 2021 - 22:37 Report Abuse
சுறா அகண்டாவா இல்லை அனகோண்டாவா
Rate this:
பாலா - chennai,இந்தியா
06 டிச, 2021 - 16:23 Report Abuse
பாலா பால்கி சித்தப்புவோட படம்முனனாலே ஒரு டெரர்ல்ல இருக்கும் அப்பால அவரோட ரசிகர்கள் கேட்கவா வேனும் சும்மா பூந்து ஊடுகட்டி விளையடுவானுவோ
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in