அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திரிஷா சாமி தரிசனம் |
ஒரே ஒரு வெற்றிக்காக தொடர்ந்து போராடி வரும் நடிகர்களில் ஒருவர் தமன் குமார். அவர் அறிமுகமான படித்துறை படம் வெளிவரவில்லை. அதன்பிறகு அச்சமின்றி, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம், சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேதுபூமி, 6 அத்தியாயம், நேத்ரா படங்களில் நடித்தார். எந்த படமும் அவரது கேரியருக்கு உதவவில்லை.
இதனால் சின்னத்திரை பக்கம் சென்றார். இப்போது வானத்தை போல தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் பெரிய திரையில் தோன்றுகிறார். கண்மணி பாப்பா என்ற திகில் பேய் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ரீமணி இயக்கி உள்ளார்.
ராஜேந்திர பிரசாத் மற்றும் சுந்தர்.ஜி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் தமன்குமாருடன் மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.ஏ.ராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாய் தேவ் இசையமைத்துள்ளார்.
படம் பற்றி தமன் கூறியதாவது: இயக்குனர் ஸ்ரீமணி சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கலாம் என்று சொன்னார். ஆனால் தயாரிப்பாளர் கதை பிடித்துப் போனதால் பெரிதாகவே பண்ணலாம் என்று சொன்னார். மிகச்சிறப்பான திரைக்கதையோடு வந்திருக்கும் படம் இது. வழக்கமான பேய்படம் போன்று இருக்காது. இயக்குநர் ஸ்ரீமணி அருமையாக இயக்கியிருக்கிறார். நான் நடித்ததில் இப்படம் தான் பெஸ்ட். இந்தப்படம் நிச்சயமாக பெரிய வெற்றிப்படமாக அமையும். என்றார்.