Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா டிக்கெட் - ஆந்திர முதல்வருக்கு சிரஞ்சீவி கோரிக்கை

26 நவ, 2021 - 10:14 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-request-to-CM-regarding-cinema-ticket

ஆந்திர மாநிலத்தில் ஆந்திரப் பிரதேச சினிமாஸ் ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2021ஐ கொண்டு வந்துள்ளது மாநில அரசு. இதன் மூலம் சினிமா தியேட்டர் டிக்கெட்டுகளை அரசு சார்புடைய ஆந்திர சினிமா மற்றும் தியேட்டர் வளர்ச்சிக் கழகம் மூலம் ஆன்லைனில் விற்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்து சில மாதங்களுக்கு முன்பே அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தெலுங்கு சினிமாவில் தற்போது பல பான்-இந்தியா படங்கள் பல கோடி ரூபாய் செலவில் தயாராகி வருகிறது. அந்தப் படங்கள் இந்த குறைந்த கட்டணங்களில் வசூலை அள்ள முடியாது. எனவே, தெலுங்கு திரையுலகத்தினர் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர். அதே சமயம் ஆன்லைன் மூலம் அரசு தரப்பில் டிக்கெட் விற்பனை ஒழுங்குபடுத்தப்படுவதை அவர்கள் வரவேற்றுள்ளனர்.

தெலுங்கு திரையுலகத்தின் மூத்த நடிகரான சிரஞ்சீவி, முதல்வருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், “ஒளிவு மறைவற்ற ஆன்லைன் டிக்கெட் விற்பனை சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி. அதே சமயம், தியேட்டர்கள் செயல்படுவதற்கும், திரையுலகத்தை நம்பி பல குடும்பங்கள் இருப்பதாலும் குறைக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்களை ஜிஎஸ்டிக்கேற்ப மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று மாற்றியமைக்க வேண்டும். இதை தயவு செய்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஊக்கம் இருந்தால் மட்டுமே தெலுங்கு திரையுலகம் வாழ முடியும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளில் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வருமா?பிறந்தநாளில் ரஜினியின் புதிய பட ... காட்டின் வளம் பேசும் வனம் தியேட்டரில் இன்று ரிலீஸ் காட்டின் வளம் பேசும் வனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

P.Niranjan - colombo,இலங்கை
26 நவ, 2021 - 10:20 Report Abuse
P.Niranjan முதல் உங்க சம்பளம் தயாரிப்பு செலவுகள்ல குறைங்க.அதவிட்டு டிக்கட் விலையை ஏற்ற சொல்லிங்க.நாங்க 400 கோடி,600 கோடிக்கு படமெடுக்க சொல்லுறம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in