Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வருமா?

26 நவ, 2021 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Will-Rajinikanths-new-film-be-announced-on-his-birthday?

ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளிவந்தது. படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் உண்மை. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் திருப்தியளிக்கவில்லை என்பதே பலரது கருத்து. அதை நிரூபிக்கும் வகையில் படம் வெளியான 21 நாட்களில் ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட்டுவிட்டார்கள். ரஜினிகாந்த் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என திரையுலகத்தில் பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

புதிய படங்கள் அதிலும் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் இப்படி 21 நாட்களில் ஓடிடி தளங்களில் வெளியாது தியேட்டர் வசூலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர்காரர்கள் அச்சப்படுகிறார்கள்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் நெகட்டிவ் கருத்துக்களை மறக்கடிக்கும் விதத்தில் ரஜினியின் பிறந்தநாளுக்கு புதிய பட அறிவிப்பு வெளியாகுமா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இன்னும் இரண்டு வாரத்தில் ரஜினியின் பிறந்தநாள் வர உள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் போட்டியில் இயக்குனர்கள் கார்த்திக் சுப்பராஜ், நெல்சன் ஆகியோர் உள்ளதாகத் தெரிகிறது. இதில் பேட்ட இயக்குனரே முந்திக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாராவுடன் இணையும் அனுபம்கெர் - இது அவரது 522வது படம்நயன்தாராவுடன் இணையும் அனுபம்கெர் - ... சினிமா டிக்கெட் - ஆந்திர முதல்வருக்கு சிரஞ்சீவி கோரிக்கை சினிமா டிக்கெட் - ஆந்திர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

27 நவ, 2021 - 07:56 Report Abuse
K. GANESAN ponga, rest etunga
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27 நவ, 2021 - 07:18 Report Abuse
NicoleThomson இவரை திட்டும் பலரும் ஒன்றை மறந்து விட்டார்கள் , இவர் இப்போது வெறும் ஆடும் பொம்மை , இவரை வைத்து ஆட்டம் போடுபவர்கள் சினிமா துறையில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் , இதனை ரஜினி உணர்ந்து வெளியே போகிறேன் என்றால் பத்மா சேஷாத்திரி பள்ளிக்கு செய்ததை போல பல சித்து வித்தைகளை காட்டி விடியல் தருவாங்க , இனி இவர் இப்படித்தான் ஆடியாக வேண்டும்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
27 நவ, 2021 - 06:07 Report Abuse
Mani . V அடுத்த புரடியூசர் (விக்கெட்?) அவுட்.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
27 நவ, 2021 - 05:01 Report Abuse
Bhaskaran நடிகை மீனாவின் மகளுடன் சோடியாக அடுத்த படம் நடிப்பார் தாத்தா
Rate this:
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
26 நவ, 2021 - 20:59 Report Abuse
PUSHYA  PUTHTHIRN ஏதோ உருமாறிய கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதிலோ, அல்லது தேசிய பேரிடர் மீட்புப் பணிக்கு பங்களிப்பதில் போட்டா போட்டியோ இருப்பது போல் நியூஸ் இருக்கிறது/// "கூத்தாடி கூத்தாடி தான்"-என்று நான் சொல்ல வில்லை-தமிழ்த் திரையுலகில் பழமும் தின்று கொட்டையும் போட்ட நடிகவேள் எம்.ஆர். ராதா ஒத்துக் கொண்டு கூறியது தான்.//////"மாபெரும் அதிகாரிகளையோ, விஞ்ஞானிகளையோ தலையில் தூக்கி வைத்துக் கொள்ளணும்,, பேச்சைக் கேட்கணும்/// எங்களை போன்ற கூத்தாடிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கணும்///படம் பாத்தோமா அபிப்பிராயம் சொன்னோமான்னு அதோடு நிப்பாட்டிக்கணும் ////ஆயுசுக்கும் அவன் நினைவாகவே அவன் பின்னாடியே போய்க் கொண்டிருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்////
Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in