Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நள்ளிரவு வரை போன ‛மாநாடு' பஞ்சாயத்து : தீர்வு ஏற்பட்டது எப்படி?

25 நவ, 2021 - 14:08 IST
எழுத்தின் அளவு:
How-Maanaadu-problem-solved

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை திடீரென ‛‛தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவிக்கிறேன்'' என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார்.

பைனான்சியருக்கு தயாரிப்பாளர் பணம் கொடுக்க வேண்டியிருந்ததால் கடைசிநேரத்தில் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை அடுத்து, ‛‛படம் இன்று வெளியாகி உள்ளது. படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருவதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர். இதனிடையே இந்த பிரச்னை சுமூகமாக தீர்ந்தது எப்படி என தகவல் கிடைத்துள்ளது.

இதுப்பற்றி இந்த பிரச்னையை தீர்க்க உதவியர்களில் முக்கியமானவரான தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் நம்மிடம் கூறுகையில், ‛‛மாநாடு தயாரிப்பாளர், பைனான்சியர் உத்தம்சந்திற்கு பணம் தர வேண்டியிருந்ததால் கடைசிநேரத்தில் படவெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. உதயநிதியை இந்த பிரச்னையை தீர்க்க முன்வந்தார். ஆனால் படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால் அவர் விலகி கொண்டார். பின்னர் சிம்பு, அவரது பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ஆகிய மூவரும் இந்த படத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். இவர்களுடன் நானும், தயாரிப்பாளர்கள் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் ஆகியோரும் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தோம். இந்த தருணத்தில் பைனான்சியர் உத்தம்சந்திற்கும் நன்றி சொல்லனும். அவரும் கறாராக நடக்காமல் நாங்கள் சொல்லியதை ஏற்றுக் கொண்டார். படம் வெளியாகி உள்ளது. அனைவருக்கும் நன்றி'' என்றார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பொம்மை நாயகி படப்பிடிப்பை முடித்த யோகிபாபுபொம்மை நாயகி படப்பிடிப்பை முடித்த ... பிரபுதேவா - ரெஜினாவின் அழியாத கோலங்கள் பிரபுதேவா - ரெஜினாவின் அழியாத ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

P Ravindran - Chennai,இந்தியா
28 நவ, 2021 - 19:29 Report Abuse
P Ravindran இனி திரையுலகம் இருளில் இருக்கும். படங்களை அடிமட்ட விலைக்கு மிரட்டி வாங்குவார்கள்.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
27 நவ, 2021 - 05:08 Report Abuse
meenakshisundaram என்னமா திறமையை காட்டறாங்க ?-படங்களில் ஹீரோ வேஷம் ,கட்சியிலே முக்கியா பங்காற்றுதல் ,மக்களிடையே சென்று தீர்வு .நலத்திட்டங்கள் ,அப்பப்ப இது மாதிரி பிசினஸ் டீல்கள் ?ம் ,பிறந்தா இப்படீல்லா இருக்கோணும் ?
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
26 நவ, 2021 - 13:21 Report Abuse
Shekar ஓடை நரி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு ஆடுகளின் சண்டையை பார்த்துக் கொண்டிருந்தது. நல்லவேளை ஓடை நரியிடம் சிக்காமல் ஆடுகள் சமாதானமாகி விட்டது.
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
26 நவ, 2021 - 12:33 Report Abuse
ram விடியல் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது
Rate this:
Radja - Singapore,சிங்கப்பூர்
26 நவ, 2021 - 12:24 Report Abuse
Radja திருட்டு கொள்ளை கூட்டம் நடமாட்டம்தான் .அப்பவே முன்னாள் முதல்வர் சொன்னார் நாட்டில் விஷ கிருமிகள் பரவுகிறது என்று.வீராணம் வூழல் ,பூச்சி மருந்து வூழல் சக்தி பைப் கோதுமை வூழல் ௨ ஜி வூழல் 330 பிராட்பேண்ட் வூழல் .எல்லாம் கட்டுமரத்தோட கைவண்ணம் .வோட்டு போட்டதற்கு அனுபவிங்கடா.தமிழ் நட்டு முட்டாள்கள் .வாழ்க
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in