Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தி நடிகரின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன்

25 நவ, 2021 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-at-Hindi-actress-birthday-party

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் 'மாறன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடிப்பதால் அந்த நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனின் பிறந்தநாள் பார்ட்டியில் மாளவிகா மோகனன் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்தி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சியான உடையில் மாளவிகா மோகனன் காட்சி அளிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எகிப்தில் ஆண்ட்ரியா சுற்றுலாஎகிப்தில் ஆண்ட்ரியா சுற்றுலா விபத்திற்கு பின் முதன்முறையாக கடை திறப்பு விழாவுக்கு வந்த யாஷிகா ஆனந்த் விபத்திற்கு பின் முதன்முறையாக கடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
27 நவ, 2021 - 11:14 Report Abuse
Bala Murugan சினிமா துறையை பொறுத்தவரை ஒரு பெண் பிள்ளை நடிக்க வந்தாலே அச்சமாகத்தான் இருக்கிறது. எவ்வளவுதான் ஒழுக்கமாகவும் அடக்கமாகவும் இருந்தாலும் அவர்கள் சினிமா துறையில் கிளமர் காட்ட வேண்டும் நிர்வாணமாக வர வேண்டும் படுக்கையை பகிர வேண்டும் உள்ளம் தூய்மையாக இருந்தாலும் உடலை மற்றவர்களுக்கு காட்ட வேண்டும் அதன் மூலம் நிறைய சம்பாதிக்க வேண்டும் அதுவும் இப்போது பள்ளியில் படிக்கும்போதே பள்ளியறைக்கு வந்துவிடுகிறார்கள். நடிகனாக நடிப்பவனுக்கு படுக்கை பகிர வேண்டியதில்லை. ஆனால் நடிகைக்கு படுக்கையை பகிர வேண்டும் நிர்வாணமாக வர வேண்டும், நடிகனுக்கு இந்த நிலை இருந்தால் வடிவேலு ஒரு படத்தில் சொல்வாரே " அம்மணக்கட்டையாவா என்னாலேயே நெனச்சி பார்க்க முடியலையே இந்த மாதிரி ஆம்பளைங்களை பிறந்த மேனியோட போட்டோ எடுத்து அது மூலமா அரிசி சாப்பிடுறவனாடா நீ ? " என்பதுதான் ஞாபகத்திற்கு வருகிறது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in