Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமுத்திரகனி படத்திற்கு டைட்டில் பிரச்சினை

24 நவ, 2021 - 16:08 IST
எழுத்தின் அளவு:
Chithirai-Sevvaanam-under-title-issue

இயக்குனர் ஏ.எல்.விஜய் கதை எழுதி, தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். இதனை சண்டை இயக்குனர் சில்வா இயக்கி இருக்கிறார். இதில் சமுத்திரகனி, நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஓடிடி தளத்திற்கென்று தயாராகி உள்ள இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி முதல் வெளிவர இருக்கிறது. இது தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான அன்பை சொல்லும் படம்.

இந்த படத்தின் டைட்டிலுக்கு தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த தலைப்பு எங்களிடம் உள்ளது என்று அத்திலி சினிமா என்ற நிறுவனம், இயக்குனர் சில்வாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.எல்.விஜய்க்கும், வெளியிடும் ஜீ5 நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சித்திரை செவ்வானம் தலைப்பை ஏற்கனவே அத்திலி சினிமா தனது பெயரில் 17.03.2020 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளது. சித்திரைச் செவ்வானம் படத்தின் அறிவிப்பை பார்த்த அத்திலி சினிமா நிறுவனம், படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த பதிலும் வராத நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டைட்டில் தான் படத்தின் டைட்டில்டைட்டில் தான் படத்தின் டைட்டில் மீண்டும் வெளிவருகிறது ‛தி மேட்ரிக்ஸ்' மீண்டும் வெளிவருகிறது ‛தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 நவ, 2021 - 03:50 Report Abuse
meenakshisundaram இதெல்லாம் வேடிக்கையா இல்லை? செம்மொழின்னு சொல்றோமே அதிலே ஒரு சின்ன டைட்டில் கிடைக்கலையா சினிமாக்காரங்களே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in