Advertisement

சிறப்புச்செய்திகள்

‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துரோகம் - ஜெய்பீம் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை சூர்யாவுக்கு திருப்பி அனுப்பிய எழுத்தாளர்

22 நவ, 2021 - 10:51 IST
எழுத்தின் அளவு:
Jaibhim-issue-:-Writer-returns-his-payment-received-for-Jaibhim-movie

விருத்தாசலம் : ஜெய்பீம் படத்தின் வசனத்தை வட்டார மொழியில் மாற்றிய எழுத்தாளர் கண்மணி குணசேகரன், பட நிறுவனம் அளித்த 50 ஆயிரம் ரூபாயை திருப்பி அனுப்பி உள்ளார்.

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ஜெய்பீம் படம் பல்வேறு விவாதங்களையும், சர்ச்சைகளையும் உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் பணியாற்றிய கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை பகுதியைச் சேர்ந்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், மூன்று பக்க கடிதத்தை படத்தை தயாரித்த 2டி நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார்.

கடித விபரம் வருமாறு : படத்தின் கதை, கம்மாபுரம் காவல் நிலையத்தில் 90களில் நடந்த உண்மை சம்பவம். கதையின் களம் விருத்தாசலம் கம்மாபுரம் சார்ந்த பகுதி என்பதால் காட்சிகளில் வரும் உரையாடல், நடுநாட்டு வட்டார மொழியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என இயக்குனர் ஞானவேல் ஆகிய நீங்கள் சொன்னீர்கள். சமவெளி பழங்குடியினரான இருளர்களின் வாழ்வை சொல்லும் படமென்பதால் வட்டார வழக்கு மாற்றத்திற்கு சம்மதித்தேன்.




படம் எலி வேட்டை என பரிதாபமான தலைப்பாக இருந்ததால் மேலும் கவனம் செலுத்தவில்லை. வட்டார உரையாடல் மாற்றிய பணிக்கு 50 ஆயிரம் ரூபாயை என் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தீர்கள். கம்மாபுரம் பகுதி இருளர் வாழ்வியல் காட்சிக்கு பொருத்தமாக இருக்காது என்பதால் விழுப்புரம் பகுதியில் படப்பிடிப்பை முடித்தீர்கள்.

திடீரென எலி வேட்டை என்ற தலைப்பு பெயர் மாற்றம் பெற்று ஜெய்பீம் என நாளிதழ்களில் விளம்பரம் கண்டேன். வன்னியர்களின் அக்னி கலச காலண்டர் வைத்த காவல் ஆய்வாளர் வீட்டுக் காட்சியும் அதிர்ச்சியை தந்தது. என்னிடம் கொடுத்த பிரதியில் வன்னியர் அக்னி கலசம் போன்ற காட்சி குறியீடுகள் எல்லாம் இல்லை. பல இடங்களில் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தையே கொலையாளிகளாக சித்தரித்ததை தாங்கிக் கொள்ள இயலவில்லை.




படைப்பாளி, கலைஞன் என சொல்பவர்களுக்கு நேர்மை வேண்டும். எலி வேட்டை என என்னிடம் காட்டி ஜெய்பீம் என நீங்கள் மாற்றி உள்ளீர்கள். ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திற்கு என் பெயரையும் வைத்துள்ளீர்கள். கடந்த 25 ஆண்டு காலம் என் எழுத்தில் தவழ்ந்த எங்கள் நடுநாட்டு மொழியை எங்கள் இனத்திற்கு எதிராக என்னாலேயே திருப்ப செய்த உங்கள் ஏமாற்றுத் துரோகம் இனி எந்த படைப்பாளிக்கும் வரவே கூடாது.

எனவே, வட்டார மொழி மாற்ற பணிக்காக தாங்கள் அனுப்பிய 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தங்களுக்கே அனுப்பியுள்ளேன். காசோலையை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
சசிகுமார் நடிக்கும் ‛அயோத்தி' படம் ஆரம்பம்சசிகுமார் நடிக்கும் ‛அயோத்தி' படம் ... பூவே பூச்சூடவா கால படங்களை வெளியிட்ட நதியா பூவே பூச்சூடவா கால படங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
23 நவ, 2021 - 06:10 Report Abuse
Kalaiselvan Periasamy இந்த sam
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
23 நவ, 2021 - 04:30 Report Abuse
meenakshisundaram இதை தான் ... அடிப்பது என்ரூ சொல்றாங்களா ?
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
23 நவ, 2021 - 01:17 Report Abuse
naadodi அந்தோணிசாமி குருமூர்த்தி யானதற்கோ, அல்லது அக்கினி சட்டி வைத்துள்ளதற்கோ பதில் சொல்லா நாலடியார், இந்த பணத்தை இழுத்து உள்ளே போட்டுக்குவாரு. என்ன பெரிய சேவை, பணம் பண்ணுவதுதான் அவிக குறிக்கோள். அதற்காக எதுவும் செய்வார்கள்.
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
22 நவ, 2021 - 21:40 Report Abuse
Sathyanarayanan Bhimarao நியாயமாகப் படம் எடுப்பவர் என்றால் இன்ஸ்பெக்டரின் ஒரிஜினல் பெயரை ஏன் மாற்ற வேண்டும்? ஜாதி துவேஷத்தை விட்டுத் தள்ளுங்கள், உண்மை மை சம்பவத்தில் கற்பனையை சேர்க்க அவருக்கு என்ன உரிமை உள்ளது?மன்னிக்க முடியாத குற்றம் அது.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
22 நவ, 2021 - 19:27 Report Abuse
Bhaskaran குள்ளன் துடைச்சுப்போட்டுக்கொண்டுபோவான்
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in