Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறிய நடிகருடன் ஜோடி சேர நயன்தாரா மறுப்பு?

15 நவ, 2021 - 09:55 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-not-ok-to-act-with-small-actor

மலையாளத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்து வருகிறார்கள். படத்தில் நயன்தாரா கணவர் கதாபாத்திரத்தில் நடிக்க சத்ய தேவ் என்ற சிறிய நடிகரைத் தேர்வு செய்துள்ளார்கள். ஆனால், தனக்கு ஜோடியாக அவரை நடிக்க வைக்கக் கூடாது என படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவிடம் நயன்தாரா கூறியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிக்க விரும்பும் நயன்தாரா, சிறிய நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுப்பதே அதற்குக் காரணம். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்ட நிலையிலும், சத்ய தேவை ஒப்பந்தம் செய்துவிட்டதாலும், நயன்தாராவை சமாதானப்படுத்த படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.

மலையாளத்தில் அந்தக் கதாபாத்திரத்தை விவேக் ஓபராய் ஏற்று நடித்திருந்தார். அவருடைய கதாபாத்திரத்தில்தான் சத்ய தேவ் நடிக்க உள்ளார். படத்தின் முக்கிய வில்லனே இந்தக் கதாபாத்திரம் தான். படக்குழுவினரின் சமாதானத்தை நயன்தாரா ஏற்பாரா அல்லது அவரது விருப்பப்படி படக்குழு நடக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா ; லஞ்ச் நேரத்தில் ராஷ்மிகா வெளியிட்ட புகைப்படம்புஷ்பா ; லஞ்ச் நேரத்தில் ராஷ்மிகா ... விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Bairav Kumar - Chennai,இந்தியா
16 நவ, 2021 - 06:52 Report Abuse
Bairav Kumar அம்மணிக்கு 46 வயசாச்சிகிறதுனால சிறிய நடிகர்களுடன் நடிக்க கூச்சப்படுகிறாராம்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17 நவ, 2021 - 04:35Report Abuse
Matt Pமகன் வயசு பயன்கள் கூட நடிச்சு பையன்களுக்கு கிளு கிளுப்பு வரக்கூடாதுன்னு நினைச்சிருப்பாரு. நல்ல மனசு தான்....
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
16 நவ, 2021 - 00:17 Report Abuse
chakra இது முற்றிலும் பொய்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in